Just In
- 29 min ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 8 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 10 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 13 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்!
ஸ்கோடா கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த எஸ்யூவி மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய எஸ்யூவி கார்களுடன் இந்திய சந்தையை ஒரு கை பார்க்கும் முனைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கடந்த ஆண்டு ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த புதிய கரோக் எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 1,000 கார்களும் விற்று தீர்ந்துவிட்டன.

இந்த நிலையில், கரோக் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் ஆவணத்தில், மிக விரைவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்தியாவில் களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி ஸ்கோடா பிரியர்களுக்கு பெரிய அளவிலான சந்தோஷத்தையும், ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியை எதிர்பார்ப்பவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் செய்தியும் வெளியாகி இருக்கிறது.

அதாவது, கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் முதல் லாட் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டது. அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த எஸ்யூவி விற்பனைக்கு வந்தது.

மேலும், ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது இது மிகவும் கணிசமான விலையில் வந்ததது. மேலும், இதே கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு ரூ.19.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், இது விலை அதிகம் என்ற கருத்து எழுந்தது.

இருப்பினும், வெறும் 5 மாதங்களில் ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் அனைத்து யூனிட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்தது. இந்த விஷயம், ஸ்கோடா நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.

இருப்பினும், கரோக் எஸ்யூவியின் விலை அதிகம் என்ற பிம்பம் இருந்தது. இது கரோக் எஸ்யூவியின் விற்பனையில் சிறிய தடைக்கல்லாக கருதப்பட்டது. விலை அதிகம் என்ற பிம்பத்தை உடைக்கும் முயற்சியில் ஸ்கோடா இறங்கி இருக்கிறது. அதன்படி, முக்கிய உதிரிபாகங்களாக தருவித்து, இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்வது குறித்து ஸ்கோடா ஆட்டோ பரிசீலித்து வருகிறது.

இதன்மூலமாக, ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் விலை மிக கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்போது, விலை சில லட்சங்கள் குறையும் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆவலையும், மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக மாற்றி இருக்கிறது.

புதிய ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல மின்னணு திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 8 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சப்போர்ட் வசதி, நேவிகேஷன், மெமரி வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை இடம்பெற்றன. ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன் அசத்தியது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்புற சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த கார் மணிக்கு 202 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.
Via- Zigwheels