குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

ஸ்கோடா எஸ்யூவி மாடலின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்டும் விரைவில் ஆட்டோமேட்டிக் தேர்வை பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

ஸ்கோடா நிறுவனம் ஆக்டிவ், அம்பிஷன், ஸ்டைல் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் குஷாக்கை கடந்த ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்தியது. ஆனால் இதில் இரு வேரியண்ட்களில் மட்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த நிலையில் சமீபத்தில் நமக்கு கார் தேக்கோ செய்திதளம் மூலம் கிடைத்துள்ள தகவல்படி பார்க்கும்போது, குஷாக்கின் ஆரம்ப நிலை ஆக்டிவ் வேரியண்ட்டும் விரைவில் ஆட்டோமேட்டிக் தேர்வை பெறவுள்ளதை அறிய முடிகிறது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

பலத்த போட்டி மிகுந்த எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஸ்கோடா குஷாக்கில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 5500 ஆர்பிஎம்-இல் 114 பிஎச்பி மற்றும் 1,750 ஆர்பிஎம்-இல் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

விலை குறைவான வேரியண்ட்களில் மட்டுமே தற்போதைக்கு வழங்கப்படும் இந்த சிறிய அளவிலான டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பெரிய அளவிலான 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் 6000 ஆர்பிஎம்-இல் 147 பிஎச்பி மற்றும் 3500 ஆர்பிஎம்-இல் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவை இரண்டும் குஷாக்கின் மத்திய ஸ்டைல் வேரியண்ட்டில் கிடைக்கின்றன. ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஸ்டைலில் இருந்து ஆரம்பித்து, அம்பிஷன் வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

ஆனால் ஆரம்ப நிலை ஆக்டிவ் வேரியண்ட்டில் மட்டும் தற்போதைக்கு கிடைப்பதில்லை. இதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடனான குஷாக் கார்கள் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்தே டெலிவிரி செய்யப்படும் என அறிமுகத்தின்போது அறிவிக்கப்பட்டது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

அதன்படி சமீபத்தில் இந்த டாப் வேரியண்ட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ஆட்டோமேட்டிக் தேர்வில் குஷாக்கின் ஆரம்ப விலையாக ரூ.14.19 லட்சம் (அம்பிஷன் வேரியண்ட்) உள்ளது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

மேனுவல் தேர்வுகளையும் சேர்த்தால், குஷாக்கின் ஆரம்ப விலை ரூ.10.49 லட்சமாகும். விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும் குஷாக்கின் மலிவான ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.12 லட்சம் அளவில் எதிர்பார்க்கின்றோம்.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

அதாவது அம்பிஷன் -மேனுவல் வேரியண்ட்டை காட்டிலும், ஆக்டிவ் ஆட்டோமேட்டிக் காரின் விலை குறைவாக நிர்ணயிக்கப்படும். இந்த வகையில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவிலேயே மலிவான ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை கொண்ட காராக குஷாக் விளங்கவுள்ளது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

இருப்பினும் மாருதி சுஸுகியின் எஸ்-க்ராஸ் எஸ்யூவிக்கு அடுத்ததாகவே இருக்கும். ஏனெனில் எஸ்-க்ராஸ் தான் தற்போதைக்கு குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்கும் பிரீமியம் தரத்திலான எஸ்யூவி மாடலாக உள்ளது. ரூ.10.83 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்தே எஸ்-க்ராஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் கிடைக்கின்றன.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

குஷாக்கை பொறுத்தவரையில், ஸ்கோடாவின் எம்க்யுபி ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தில் இந்த எஸ்யூவி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரம் முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இந்திய சாலைகளுக்கு ஏற்ற பரிமாண அளவுகள் மற்றும் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் உடன் குஷாக் உருவாக்கப்பட்டுள்ளது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

ஸ்கோடா குஷாக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.17.62 லட்சம் வரையில் உள்ளன. மாருதி எஸ்-பிரெஸ்ஸோ மட்டுமின்றி ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ், ரெனால்ட் டஸ்டர் போன்றவையும் குஷாக்கிற்கு விற்பனையில் போட்டியாக உள்ளன. குஷாக்கை தொடர்ந்து, ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனில் இருந்து இதே எம்க்யுபி ஏ0-இன் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட டைகுன் மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

குறைவான விலையில், ஆட்டோமேட்டிக் தேர்வில் கொண்டுவரப்படும் ஸ்கோடா குஷாக்!! எந்த விலையில் எதிர்பார்க்கலாம்?

மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஃபோக்ஸ்வேகன் டைகுனின் மீதும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் டைகுன் எஸ்யூவி மாடல் வருகிற செப்டம்பர் மாத மூன்றாம் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் தகவல்கள் வெளியாகி இருந்தன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
The Entry-Level Skoda Kushaq Will Get An Automatic Option.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X