குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

6 காற்றுப்பைகள் மற்றும் டயர்களின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்புடன் குஷாக்கின் டாப் வேரியண்ட்களை ஸ்கோடா குஷாக் நிறுவனம் சைலண்டாக அப்டேட் செய்துள்ளது. ஸ்கோடாவின் இந்த எஸ்யூவி காரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அப்கிரேட்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

6 காற்றுப்பைகள் & டயர்களின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு என இந்த பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழிற்நுட்பங்கள் ஸ்கோடா குஷாக்கின் டாப் ஸ்டைல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் புதியதாக வழங்கப்பட்டுள்ளன.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

முன்னதாக இந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் முன் இருக்கை பயணிகளுக்கு முன்பக்கமாக இரு காற்றுப்பைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. TPMS எனப்படும் டயர் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம் முற்றிலுமாக குஷாக் எஸ்யூவி காரின் வேரியண்ட்கள் லைன்-அப்பில் வழங்கப்பட்டது கிடையாது.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில், குஷாக்கின் ஸ்டைல் வேரியண்ட் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கிறது. இந்த அப்கிரேட்களினால் ஸ்கோடா குஷாக்கின் இந்த குறிப்பிட்ட ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களின் விலைகள் தலா ரூ.40,000 உயர்த்தப்பட்டுள்ளன.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

இதனால் இனி குஷாக் ஸ்டைல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.20 லட்சமாகும். ஸ்கோடா குஷாக்கின் ட்ரிம் நிலைகளிலேயே விலைமிக்கதாக விளங்கும் ஸ்டைல் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டிஎஸ்ஜி ட்ரிம்-இன் எக்ஸ்-ஷோரூம் விலை சரியாக, ரூ.18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Skoda Kushaq New Price Old Price
Style 1.0-litre TSI AT ₹16.20 Lakh ₹15.80 Lakh
Style 1.5-litre TSI DSG ₹18.00 Lakh ₹17.60 Lakh
குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் குஷாக்கின் டாப் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் கார்களை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டவை ஆகும். மற்றப்படி குஷாக்கின் மேனுவல் வேரியண்ட்களில் இந்த இரு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படவில்லை.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

6-காற்றுப்பைகள் மற்றும் TPMS என இந்த இரு புதிய மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் குஷாக் எஸ்யூவி காரில் இபிடி உடன் ஏபிஎஸ், டிசிஎஸ், ரியர்-பார்க்கிங் கேமிரா, மோதலை தவிர்க்கும் ப்ரேக்கிங் அமைப்புகள், மலைத்தொடரில் ஏறுவதற்கான கண்ட்ரோல் மற்றும் மேடான பகுதியில் சாய்வாக நிலையாக நிற்பதற்கான கண்ட்ரோல் வசதிகளையும் ஸ்கோடா நிறுவனம் வழங்குகிறது.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

இவை மட்டுமின்றி ஸ்லிப்-எதிர்ப்பு ஒழுங்குமுறை மற்றும் மோட்டார் ஸ்லிப் ஒழுங்குமுறை, ப்ரேக் டிஸ்க் வைபிங், கார் கவிழாத அளவிற்கு பாதுகாப்பு, எலக்ட்ரானிக் டிஃப்ரென்ஷியல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவையும் குஷாக்கில் வழங்கப்படுகின்றன.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு குஷாக்கில் இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக கொடுக்கப்படுகின்றன. இதில் ஒன்றான 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 116 பிஎஸ் மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

மற்றொரு பெட்ரோல் என்ஜின் தேர்வான 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டிஎஸ்ஐ-இல் 150 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். இவை இரண்டுடனும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் நிலையான டிரான்ஸ்மிஷன் தேர்வாக வழங்கப்படுகிறது.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

அதேநேரம் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் கூடுதல் டிரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸும் கொடுக்கப்படுகின்றன.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக்கிற்கு தற்சமயம் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்டவை முக்கிய போட்டி மாடல்களாக உள்ளன. இவை இரண்டுடன் விரைவில், வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி ஃபோக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி காரும் இணையவுள்ளது.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுவதுதான் ஸ்கோடா குஷாக்கின் மிக முக்க்ய சிறப்பம்சமாகும். ஏனெனில் இதனாலேயே தயாரிப்பு நிறுவனத்தால் இந்த எஸ்யூவி காரின் விலையினை இந்திய வாடிக்கையாளர்கள் ஏற்கக்கூடியதாக நிர்ணயிக்க முடிந்துள்ளது. ஆனால் இதனால் கிடைக்கும் வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் தான் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் உள்ளது.

குஷாக்கில் ஒருவழியாக 6-ஏர்பேக்குகளை கொண்டுவந்தது ஸ்கோடா!! விலையும் அதிகரிப்பு

ஏனெனில் குஷாக் கார்களில் பிரச்சனைகள் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் சிலர் சமீப வாரங்களாக தெரிவித்து வருகின்றனர். என்ஜின் கட்-ஆஃப், ஆற்றல் இழப்பு மற்றும் எலக்ட்ரானிக் பவர் கண்ட்ரோலில் அமைப்பில் உள்ள எச்சரிக்கை விளக்குகளில் ஏற்படும் பழுதுகளாக இந்த பிரச்சனைகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq AT With 6 Airbags & TPMS Launched At Rs. 16.20 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X