Just In
- 50 min ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 7 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 9 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 12 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- News
அரசியல்வாதிகளை விடாமல் துரத்தும் கொரோனா..பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு தொற்று உறுதி!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
ஸ்கோடா ரேபிட் செடான் கார் சிஎன்ஜி வேரியண்ட்டில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிறுவனத்தின் சிஇஒ ஜாக் ஹோலிஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறான அம்சங்களுடன் இந்த சிஎன்ஜி காரை எதிர்பார்க்கலாம் என்பன உள்ளிட்டவை விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த 12 மாதங்களில் நான்கு புதிய தயாரிப்பு வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முதல் மாடலாக குஷாக் எஸ்யூவி கார் வருகிற மார்ச் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆண்டு மத்தியில் இருந்து விற்பனையை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் குஷாக்கை தொடர்ந்து தற்போதைய ரேபிட் செடான் காரில் முக்கியமான அப்கிரேட்களை ஸ்கோடா வழங்கவுள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது ரேபிட் காரின் சிஎன்ஜி வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் ஸ்கோடாவிடம் உள்ளதா என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு, உள்ளது என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை, சேவை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சிஎன்ஜி என்ஜின் அமைப்புகளை சோதனை செய்யும் பணியினை ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சிஎன்ஜி வேரியண்ட்டை பெறும் முதல் காராக ரேபிட் செடானை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்ற ஆண்டில் கூட ரேபிட் சிஎன்ஜி காரின் சோதனை மாதிரி ஒன்று பொது சாலையில் அடையாளம் காணப்பட்டு இருந்தது. ரேபிட்டில் வழங்கப்படும் இந்த சிஎன்ஜி தேர்வு கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் போலோ, வெண்டோ கார்களிலும் பயன்படுத்தப்படலாம்.

தற்சமயம் ஸ்கோடா ரேபிட் ஒரே ஒரு 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய சிஎன்ஜி வேரியண்ட்டிலும் இதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் கூடுதலாக சிஎன்ஜி தொகுப்புடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக என்ஜின் பெறக்கூடிய ஆற்றல் அளவுகள் குறைய வாய்ப்பிருந்தாலும், கார் வழங்கும் மைலேஜ் கணிசமான அளவு அதிகரிக்கும்.

மைலேஜ் அளவை தெரிந்து கொள்ள ரேபிட் சிஎன்ஜி காரின் அதிகாரப்பூர்வ வெளியீடு வரை காத்திருந்தாக வேண்டும். பெட்ரோல் & டீசல் விலைகள் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக அதிக மைலேஜ் வழங்கக்கூடிய கார்களையே வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே ரேபிட்டின் சிஎன்ஜி வெர்சனை கொண்டுவர ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.