ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஒரு வழியாக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள அதன் நடுத்தர-அளவு செடான் காரின் பெயரினை வெளியிட்டுள்ளது. இதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

இன்னும் சில மாதங்களில் இந்திய சந்தைக்கான தனது செடான் காரை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. விற்பனையில் போராடிவரும் ராபிட் செடானிற்கு மாற்றாக கொண்டுவரப்படும் இந்த மிட்-சைஸ் செடான் காரின் பெயர் 'ஸ்லாவியா' என ஸ்கோடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

1895இல் முதல்முறையாக ஸ்கோடா பிராண்டின் நிறுவனர்களான விக்லாவ் லாரின் மற்றும் விக்லாவ் க்ளெமெண்ட் பை-சைக்கிள்களை ஸ்லாவியா என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்தனர். இதனை நினைவுக்கூறும் விதமாகவே தங்களது புதிய செடான் காருக்கு இந்த பெயரை வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

முதலாவதாக தயாரிக்கப்படும் ஸ்லாவியா செடான் கார்கள் வரும் மாதங்களில் வெளியிடப்படலாம். எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ள ஸ்லாவியா கார்கள் தோற்றத்தில், அப்டேட் செய்யப்பட்ட ஆக்டேவியா & சூப்பர்ப் என மற்ற ஸ்கோடா செடான் கார்களை சில இடங்களில் ஒத்து போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

கடந்த ஜூன் மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட குஷாக் மாடல் ஸ்கோடாவிற்கு எஸ்யூவி கார்கள் பிரிவில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்று கொடுத்துள்ளது. அதேபோல் ஸ்லாவியா செடான் கார்கள் பிரிவில் இந்த செக் குடியரசு நாட்டு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை பெற்று தரும் என நம்பலாம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

ராபிட் செடான் மாடல் நீண்ட காலத்திற்கு இந்தியாவில் விற்பனையில் இருக்காது என எப்போது ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் கூறினாரோ அப்போதில் இருந்து ஸ்கோடா நிறுவனம் சார்பில் புதிய மிட்-சைஸ் செடான் கார்கள் அவ்வப்போது பொது சாலையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

இந்த காருக்கு தான் தற்போது ஸ்லாவியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய ராபிட் செடான் மாடலுடன் ஒப்பிடுகையில் ஸ்லாவியா அளவில் சற்று பெரியது என்பதை சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிந்திருந்தது. காரின் முன்பக்கத்தில் பிரோஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஸ்கோடா கார்களுக்கே உரிய பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில்லை எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

பின்பக்கத்தில் மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா வழங்கப்படலாம். பின்பக்க கதவில் நம்பர் ப்ளேட் வழங்கப்பட்டு இருந்ததை சோதனை மாதிரிகளில் பார்த்திருந்தோம். இந்திய சந்தைக்கென தயாரிக்கப்படும் ஸ்லாவியா காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின்களை தேர்வுகளாக ஸ்கோடா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

இந்த இரு டிஎஸ்ஐ என்ஜின்கள் தான் குஷாக் எஸ்யூவி காரிலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடனும் கிடைக்கின்றன. அறிமுகத்திற்கு பிறகு ஸ்கோடா ஸ்லாவியாவிற்கு ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் செடான் கார்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

ஸ்லாவியா பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து ஸாக் ஹோலிஸ் கருத்து தெரிவிக்கையில், ஸ்கோடா 125 ஆண்டுகளுக்கும் மேலான உலக பாரம்பரியத்தை கொண்டுள்ளது. மிகவும் புகழ்மிக்க கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக ஸ்கோடா வருவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்த ஸ்லாவியாவை இது குறிக்கிறது.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

பாரம்பரியம் நிறைந்த ஸ்லாவியா பெயர் இப்போது மீண்டும் ஸ்கோடா பிராண்டுக்கான புதிய சகாப்தத்தை துவங்குகிறது. ஸ்லாவியா குறைக்கூற முடியாத அளவிற்கான தரம், நம்பகத்தன்மை மற்றும் டிரைவிங் அனுபவத்தை பெற்றுவரும் என்றார். புதிய ஸ்லாவியா ராபிட்டை விடவும் அதிக பரிமாண அளவுகளை கொண்டிருப்பதால் காரின் உட்புறத்தில் விசாலமான இடவசதியினை எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடாவின் புதிய செடான் காரின் பெயர் ‘ஸ்லாவியா’!! அறிமுகம் இன்னும் சில மாதங்களில்

போட்டி மாடல்களிலேயே கடந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா சிட்டிக்கு ஸ்லாவியா தோற்றத்தில் சரியான போட்டியாக இருக்கும். அளவில் பெரியதாக இருப்பது மட்டுமின்றி, சில கூடுதல் வசதிகளையும் பெற்றுவரும் என்பதால் தற்போதைய ராபிட் செடான் காரின் விலைகளை காட்டிலும் ஸ்லாவியாவிற்கான விலைகள் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. தற்சமயம் ஸ்கோடா ராபிட் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.80 லட்சத்தில் இருந்து ரூ.13.49 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda new mid-size sedan christened as the ‘Slavia’.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X