விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

மார்ச் 18ஆம் தேதி அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரின் தோற்றம் ஸ்கெட்ச் படங்களின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கெட்ச் படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

சமீபத்தில் உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட குஷாக் எஸ்யூவி இந்தியாவில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹெரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் கார்களுக்கு போட்டியாக அடுத்த மார்ச் மாதம் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

இதற்கிடையில் தான் தற்போது இந்த ஸ்கோடா எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படங்களில் மற்ற பாகங்களை காட்டிலும் காரின் சக்கரங்கள் சிறிது மிகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன. படங்களில் முன்பக்கத்தில் பிளவுப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப் அமைப்புகளை குஷாக் கார் கொண்டுள்ளது.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

காரின் முன்பக்க பம்பரின் அடிப்பகுதியின் மையத்தில் சறுக்கு தட்டு ஒன்று கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது. செங்குத்தான கருப்பு நிற ஸ்லாட்களை கொண்ட ஸ்கோடாவின் அடையாளமான பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் அமைப்பு சுற்றிலும் க்ரோம்-ஐ கொண்டிருக்க, அதற்கு கீழே காற்று ஏற்பானை பார்க்க முடிகிறது.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

அதேநேரம் இந்த முக்கிய காற்று ஏற்பானுக்கு இரு புறங்களிலும் சற்று கீழ்நோக்கி பார்க்கப்பட்ட துணை காற்று ஏற்பான்களும் உள்ளன. பக்கவாட்டில் காரின் முன்பக்க ஃபெண்டரில் இருந்து இறுதி முனை வரையில் ஷோல்டர் லைன் ஒன்று ஸ்கோடா முத்திரை உடன் துவங்கி செல்கிறது.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

இவை தவிர்த்து இந்த ஸ்கெட்ச் படங்களின் மூலமாக பார்க்கக்கூடிய காரில் வழங்கப்பட்டுள்ள மற்ற அம்சங்களாக தண்டவாளங்கள் உடன் சறுக்கலான மேற்கூரை, கருப்பு நிற B-பில்லர்கள், 17-இன்ச் இரு-நிற அலாய் சக்கரங்கள், க்ரோம்டு ஜன்னல் ஃப்ரேம்கள், பின்பக்க கதவில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் உள்ளிட்டவை உள்ளன.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

SKODA என்ற எழுத்துகள் தடிமனான டிசைனில் பின்பக்க கதவு மற்றும் சறுக்கலின்போது காரின் பின்பக்கம் பெரிய அளவில் பாதிப்படைவதை தடுக்கும் தட்டு உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ளது. ஒளி பிரதிப்பலிப்பான்களை கீழே கொண்டே பின்பக்க ஹெட்லைட்கள் தலைக்கீழான L வடிவத்தில் வழங்கப்பட்டுள்ளன.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

மற்றபடி காரின் உட்புறம் இந்த ஸ்கெட்ச் படங்களில் காட்டப்படவில்லை. இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எம்க்யுபி ஏ0 இந்தியா ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கோடா குஷாக் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

விற்பனைக்குவரும் புதிய ஸ்கோடா குஷாக்கின் தோற்றம் இப்படிதான் இருக்குமாம்!! வெளிக்காட்டிய புதிய ஸ்கெட்ச் படங்கள்

இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் விஷன் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குஷாக்கின் டெலிவிரி பணிகள் இந்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் இருந்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kushaq Design Sketches Revealed Ahead Of March 18 Debut
Story first published: Friday, February 19, 2021, 2:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X