2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

விரைவில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 2021 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய டீசர் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி அதன் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை இணைய நிகழ்ச்சியின் மூலமாக உலகளவில் வெளிக்காட்ட உள்ளது.

இதற்கிடையில் தான் தற்போது கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கோடாவின் இந்த ப்ரீமியம் க்ராஸ்ஓவரில் வெளிப்புறத்தில் முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்கள் முன்பக்கத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளன.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

இதை வெளிக்காட்டும் விதத்திலேயே தற்போது இந்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் ஏகப்பட்ட காஸ்மெட்டிக் திருத்தியமைப்புகள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

எண்கோண க்ரில் உடன் புதிய கோடியாக் காரின் முன்பக்கத்தை மிகவும் கம்பீரமான தோற்றத்தில் ஸ்கோடா நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதேபோல் எல்இடி ஹெட்லேம்ப்கள் கூர்மையான வடிவத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

ஹெட்லேம்பிற்கு தனித்தனியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துணை எல்இடி விளக்குகள் 4-கண் தோற்றத்தை வழங்குகின்றன. பின்பக்கத்தில் 2021 ஸ்கோடா கோடியாக் மெல்லியதான எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் அப்டேட்டான பம்பரை கொண்டுள்ளது.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

புதிய முன்பக்க பம்பர் ஆனது ஃபாக் விளக்குகளுக்கு கீழே L-வடிவிலான ட்ரிம் உடன் அகலமான, தாழ்வான காற்று காற்று ஏற்பானை கொண்டுள்ளது. பொனெட்டின் வடிவமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஸ்கோடா லோகோ, ‘SKODA' எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளது.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

மற்றப்படி 2021 ஸ்கோடா கோடியாக்கின் உட்புற கேபினில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் மைய கன்சோல் மற்றும் டேஸ்போர்டின் வடிவம் அப்படியே தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உடன் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கலாம்.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

அதேபோல் புதிய இருக்கை மற்றும் ட்ரிம் நிலைகள் புதியதாக அறிமுகம் செய்யப்படலாம். கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் செயல்திறன் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ விபரமும் இதுவரையில் நமக்கு கிடைக்கவில்லை. எனவே செயல்திறனில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் சியட் டர்ராகோ கார்களின் அடிப்படையிலான ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள 2021 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் தற்போதைய கோடியாக் காரை போன்று பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஸ்கோடா கோடியாக் காரில் இத்தனை அப்கிரேட்களா!! வரும் ஏப்ரல் 13ஆம் தேதி அறிமுகம்!

2021 கோடியாக்கின் விலைமிக்க வேரியண்ட்களில் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பு வழங்கப்படலாம். 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோடியாக் கார்களை இதுவரையில் 6 லட்சம் யூனிட்கள் ஸ்கோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2021 Skoda Kodiaq Facelift Teased Ahead Of Debut On April 13.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X