Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா ஸ்லாவியா கார் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது? என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா (Skoda Slavia) செடான் கார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனமே இந்த தகவலை உறுதி செய்துள்ளதால், புத்தம் புதிய ஸ்லாவியா செடான் காருக்காக காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் (Skoda Rapid) காருக்கு பதிலாக, ஸ்லாவியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. முன்னதாக ரேபிட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்கோடா ரேபிட் ஃபேஸ்லிஃப்ட் உடன் மீண்டும் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது போல் தெரிகிறது.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா நிறுவனத்தின் பிரீமியம் செடான் லைன்-அப்பில் ஸ்லாவியா இணையவுள்ளது. இந்த லைன்-அப்பில் ஏற்கனவே ஆக்டோவியா மற்றும் சூப்பர்ப் ஆகிய கார்கள் இருக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஸ்லாவியா காரை நடப்பாண்டு நவம்பர் மாதம்தான் ஸ்கோடா நிறுவனம் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மிட்-சைஸ் செடான் செக்மெண்ட்டில் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் உள்ளிட்ட கார்களுடன் ஸ்கோடா ஸ்லாவியா போட்டியிடவுள்ளது. இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் 10 லட்ச ரூபாய் முதல் 17 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் அதிகாரப்பூர்வமான விலை, வரும் மார்ச் மாதம் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் தெரிவிக்கப்படும். MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் நீளம் 4,541 மிமீ ஆகும்.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,752 மிமீ ஆகவும், உயரம் 1,487 மிமீ ஆகவும் உள்ளது. ஸ்கோடா ரேபிட் உடன் ஒப்பிடுகையில், ஸ்கோடா ஸ்லாவியா கார் 128 மிமீ நீளமானது, 53 மிமீ அகலமானது, 21 மிமீ உயரமானது. மேலும் ஸ்கோடா ரேபிட் உடன் ஒப்பிடுகையில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் வீல்பேஸ் 99 மிமீ நீளமானது. இதன் காரணமாக விசாலமான கேபினை ஸ்கோடா ஸ்லாவியா பெற்றுள்ளது.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

அதே நேரத்தில் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள ட்யூயல்-ஸ்போக் ஸ்டியரிங் வீல்தான் ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்டீரியரிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் ஸ்கோடா ஸ்லாவியா கார் பெற்றுள்ளது. மேலும் ஸ்கோடா ஸ்லாவியா காரில், ரியர் ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல் காக்பிட் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா ஸ்லாவியா கார் ட்யூயல்-டோன் இன்டீரியரை பெற்றுள்ளது. அதே சமயம் ஸ்லாவியா காரில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது. இதில், சிறிய மூன்று சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த இன்ஜின் கிடைக்கும்.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

அதே நேரத்தில் பெரிய நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு வசதிகளிலும் ஸ்கோடா ஸ்லாவியா கார் தலைசிறந்து விளங்குகிறது.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா ஸ்லாவியா காரில், 6 ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பாதுகாப்பான செடான் காரை வாங்க நினைப்பவர்களுக்கும் ஸ்கோடா ஸ்லாவியா கார் ஏற்றதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Skoda Slavia எப்போ விற்பனைக்கு வருது தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவலால் வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கார்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. எனவே தற்போது புதுப்பொலிவுடன் ஸ்கோடா நிறுவனம் களமிறங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த குஷாக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இதற்கு அடுத்தபடியாக ஸ்லாவியா கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda slavia midsize sedan india launch details
Story first published: Saturday, December 25, 2021, 12:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X