ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் உருமறைப்பு டிசைன் போட்டி ஒன்றை நடத்தியது. இதன் வெற்றியாளர் இன்று (அக்டோபர் 11) அறிவிக்கப்பட்டார். மஹாராஷ்டிரா மாநிலம் பதல்பூர் பகுதியை சேர்ந்த ஸ்ரேயாஷ் கரம்பெல்கர் என்பவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் செக் குடியரசில் உள்ள ப்ராக் நகருக்கு பயணம் செய்யவுள்ளார்.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

அங்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் டிசைன் பிரிவின் தலைவர் ஆலிவர் ஸ்டெபானியை அவர் சந்திக்கவுள்ளார். ஸ்லாவியா (Slavia) மிட்-சைஸ் செடான் கார் சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்படும்போது, ஸ்ரேயாஷ் கரம்பெல்கர் உருவாக்கிய டிசைனால் உருமறைப்பு செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்லாவியா என்ற புதிய மிட்-சைஸ் செடான் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக இந்த கார் சாலை சோதனைகளில் ஈடுபடுத்தப்படும். பொதுவாக கார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சாலை சோதனை செய்யும்போது உருவத்தை மறைத்திருக்கும்.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

இதற்கு ஸ்கோடா நிறுவனமும் விதிவிலக்கு அல்ல. எனவே ஸ்லாவியா கார் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்படும்போது செய்யப்படும் உருமறைப்பிற்கான டிசைனை சமர்ப்பிக்கும்படி போட்டியாளர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். இந்த போட்டி சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கோடா ஸ்லாவியா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது 5 சீட்டர் கார் ஆகும். இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் செடான் லைன்-அப்பை ஸ்லாவியா வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. MQB A0 IN பிளாட்பார்ம் அடிப்படையில் ஸ்கோடா ஸ்லாவியா கட்டமைக்கப்படவுள்ளது.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

நடப்பு ஆண்டு இறுதிக்குள் ஸ்கோடா ஸ்லாவியா கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இந்திய சந்தையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தற்போதே இந்த கார் எகிற செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

ஸ்கோடா குஷாக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் தேர்வுகள்தான் ஸ்கோடா ஸ்லாவியா காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் கூடிய விரைவில் ஸ்கோடா நிறுவனம் இன்ஜின் தேர்வுகள் மற்றும் வசதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா நிறுவனம் நடத்திய உருமறைப்பு டிசைன் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு... யார்னு தெரியுமா?

ஸ்கோடா குஷாக் எஸ்யூவி கார் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு போட்டியாக வந்துள்ள ஸ்கோடா குஷாக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போன்றதொரு வரவேற்பு ஸ்கோடா ஸ்லாவியா காருக்கும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda slavia revealed in its prototype form here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X