விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் இந்திய சாலையில் காட்சி தந்துள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான கோடியாக் பெட்ரோல் கார் இந்திய சந்தையில் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் கால்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மோட்டார்பீம் செய்திதளம் மூலமாக பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் சோதனை ஓட்ட ஸ்பை வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. இதில் கார் சிவப்பு நிற நம்பர் ப்ளேட் உடன் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படாமல் உள்ளது.

விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த பிஎஸ்6 ஸ்கோடா காரின் இந்திய அறிமுகம் மிக விரைவில் இந்த வருடத்திற்குள்ளாக இருக்கலாம். இந்த ஸ்பை வீடியோவில் இரும்பு க்ரே நிறத்தில் புதிய ஸ்கோடா பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

இந்த நிறம் தற்சமயம் ஸ்கோடாவின் லைன்அப்பில் சூப்பர்ப் காரில் வழங்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடாக பிஎஸ்6 கோடியாக் மாடல் செங்குத்தான ஸ்லாட்களுடன் புதிய கருப்பு நிற பட்டாம்பூச்சி வடிவிலான க்ரில் மற்றும் திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்களை பெற்று வருகிறது.

விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

மேலும் இந்த ஸ்பை படங்களில் கார் புதியதாக பல-ஸ்போக்குகளை கொண்ட அலாய் சக்கரங்கள் மற்றும் கருப்பு நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளையும் கொண்டுள்ளது. பின்பக்கத்தில் பிளவுப்பட்ட வடிவில் எல்இடி டெயில்லைட்களை எதிர்பார்க்கலாம்.

விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

உட்புற கேபினை கிட்டத்தட்ட முந்தைய கோடியாக் காரை போலவே புதிய ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரும் கொண்டிருக்கும். இதன் கேபினில் மைய கன்சோலில் செவ்வக வடிவில் ஏசி துளைகள் மற்றும் க்ரோம் உள்ளீடுகளுடன் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

இவற்றுடன் 2021 ஸ்கோடா கோடியாக்கில் பிஎஸ்6-க்கு இணக்கமான 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

விற்பனைக்கு முன் சோதனை செய்யப்படும் பிஎஸ்6 ஸ்கோடா கோடியாக்!! இந்த நிறத்திலும் தயாராகிறதா?

அதேபோல் 4X4 ட்ரைவ் அமைப்பும் புதிய கோடியாக்கில் ஸ்கோடா வழங்கலாம். இந்த வருட இறுதியில் ராபிட் செடானிற்கு மாற்றாக ஒரு நடுத்தர-அளவு கொண்ட செடான் காரை அறிமுகப்படுத்த ஸ்கோடா இந்தியா நிறுவனம் தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து பிஎஸ்6 கோடியாக் கார் அறிமுகப்படுத்தப்படலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
BS6 Skoda Kodiaq facelift spied undisguised in India ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X