2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் வந்துவிட்டது. தற்போது விற்பனையில் உள்ள கார்களில் பனோராமிக் சன்ரூஃப், வயர் இல்லா சார்ஜிங், சாவி-இல்லா நுழைவு என ஏகப்பட்ட அசரடிக்கக்கூடிய அம்சங்கள் வந்துவிட்டன. இருப்பினும் தற்போதும் ஒரு சில 'பட்ஜெட்' கார்களில் சில அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதில்லை என்பதும் உண்மையே.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

ஒரு சிலருக்கு கார்களில் வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் என்னென்ன என்பது கூட தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக முதல்முறையாக கார் வாங்குபவர்களுக்கு. அத்தகையவர்களுக்காகவே கார்களில் அடிப்படையாக, கட்டாயமாக இருக்க வேண்டிய சில அம்சங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை

ஓட்டுனர் பணி, பார்ப்பதற்கு வேண்டுமானால் எளிமையானதாக இருக்கலாம். ஆனால் அதுவும் கடினமான வேலையே. காரில் 1 கிமீ-க்கு போவதற்குள் தோராயமாக 20 முறை கியர் மாற்ற வேண்டும் (மேனுவல் காராக இருந்தால்), 10 முறை வெளிப்புற பக்கவாட்டு கண்ணாடிகளை பார்க்க வேண்டும், இண்டிகேட்டர் போட வேண்டும், தேவையான இடத்தில் ஹார்ன் அடிக்க வேண்டும் என ஏகப்பட்ட பணிகள் அந்த 1 கிமீ தூரத்திற்குள்ளாகவே இருக்கும். தொலைத்தூர பயணங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

ஆதலால் ஓட்டுனருக்கு சவுகரியமான பயண சூழலை உருவாக்கி தர வேண்டியது கார் தயாரிப்பு நிறுவனங்களின் கடமை ஆகும். தற்போதைய சொகுசு கார்களில் மஸாஜ் வசதிகள் கூட வந்துவிட்டன. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், பட்ஜெட் கார்களில் குறைந்தப்பட்சம் ஓட்டுனர் இருக்கையை, தேவைக்கு ஏற்றாற்போல் மடக்கி கொள்ளும் வசதியாவது வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

மடக்கும் வசதி உடன் ஜன்னல் கண்ணாடிகள்

காரின் ஜன்னல் கண்ணாடிகள் மடக்கும் வசதி உடன் 1980களில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. அப்போது கையினால் சுற்ற வேண்டியதாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு பொத்தானை அழுத்தினாலே ஜன்னல் கண்ணாடிகள் திறக்கும் வசதி கார்களில் கொண்டுவரப்பட்டுவிட்டது.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

இருப்பினும், இப்போதும் நான்கு ஜன்னல் கண்ணாடிகளும் இத்தகைய வசதி உடன் சில குறிப்பிட்ட கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. எனவே குறைந்தப்பட்சம் முன் ஜன்னல் கண்ணாடிகளாவது பொத்தான் மூலம் மடக்கும் வசதி உடன் உள்ளனவா என்பதை கார் வாங்கும்போது செக் செய்து பாருங்கள். நான்கு கண்ணாடிகளும் மடக்க முடிகிறது என்றால் மிக நல்லது.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

உட்புற பகல்/இரவு கண்ணாடி

காரை ஓட்டி கொண்டிருக்கும்போது யாராவது பின்னால் வேறொரு வாகனத்தில் இருந்து வெளிச்சம் அடித்தால், முன்னோக்கி தொடர்ந்து காரை இயக்க முடியாத அளவிற்கு சில சமயங்களில் கவன சிதறல் ஏற்படும். இத்தகைய சூழலை எவர் ஒருவரும் நிச்சயமாக விரும்ப மாட்டார்கள். இந்த பிரச்சனையை சரி செய்ய கார் தயாரிப்பு நிறுவனங்களால் காரின் உட்புற கேபினில் வழங்கப்படும் அம்சம் தான் பகல்/இரவு கண்ணாடி ஆகும்.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

இத்தகைய கண்ணாடியில், ஒளி பட்டு கண்ணை கூசுவதை குறைக்கும். சற்று விலைமிக்க கார்களில் தன்னிச்சையாக-டிம் ஆகக்கூடிய கண்ணாடி பொருத்தப்படுகிறது. மலிவான கார்களில் மேனுவலாக டிம் செய்யப்படும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. இவை இரண்டில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் மிகவும் சில பட்ஜெட் கார்களில் வழங்கப்படும் டிம்மிங் செயல்பாடு அல்லாத உட்புற கண்ணாடியை வாங்க வேண்டாம்.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

வேகம்-உணர் கதவு பூட்டுகள்

வேகம்-உணர் கதவு பூட்டுகள் என்பது கார் மணிக்கு 20கிமீ வேகத்தை தாண்டினால், பூட்டப்படவில்லை என்றாலும் கதவுகள் தன்னிச்சையாக லாக் ஆகும் வசதி ஆகும். மிகவும் ஒரு அடிப்படையாக ஒரு காரில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சமாகும். ஏனெனில் எல்லாருக்கும் காரின் கதவை பூட்ட தெரியும் என உறுதியாக சொல்லிவிட முடியாது.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

முதன்முறையாக காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பையும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால், தற்போதைய காலக்கட்டத்திலும் சில விலை குறைவான கார்களில் இந்த ஆட்டோமேட்டிக் வசதி வழங்கப்படுவதில்லை. ஆதலால் கார் வாங்க போகும்போது இந்த வசதி உள்ளதா என டீலரிடம் கேட்டு கொள்ளுங்கள்.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் (ORVMs)

தற்போதைக்கு இந்த வசதி பெரும்பாலான பட்ஜெட் கார்களில் இல்லை. இருப்பினும் எதிர்காலத்தில் இது நிச்சயமாக தவிர்க்க முடியாத அம்சமாக மாறும் என்பதால், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளுடன் காரை வாங்க பாருங்கள்.

2021ஆம் காலக்கட்டத்தில், காரில் கட்டாயமாக இருக்க வேண்டிய அம்சங்கள்!! மிக அடிப்படையானவை!

ஏனெனில் அப்போது தான் மழை போன்ற சூழ்நிலையின்போதும் ஓட்டுனரால் பின்னால் வரும் வாகனங்களையும், சாலையையும் சிரமமின்றி பார்க்க முடியும். நீண்ட நேரத்திற்கு பக்கவாட்டு கண்ணாடிகளை பார்த்து கொண்டிருந்தால், அது விபத்திற்கு வழிவகுக்கும். ஆதலால் வாகனத்திற்கு பின்னால் என்னென்ன உள்ளன என்பதை விரைவாக கண்ணாடிகளை சுழற்றி பார்த்து கொள்வதுதான் சிறந்தது.

Most Read Articles

English summary
10 Basic Features That Even The Cheapest Cars Should Have!
Story first published: Wednesday, November 24, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X