அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

இளைஞர் ஒருவர் அவரது தந்தைக்கு இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) காரை ஆச்சரிய பரிசாக வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் தரமான சம்பவம்குறித்த தகவலைக் கீழே காணலாம்.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

ஓர் இளைஞர் அவரது தந்தைக்கு சர்ப்ரைஸ் பரிசாக புத்தம் புதிய ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) காம்பேக்ட் எஸ்யூவி காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்தியாவில் தற்போதும் பலருக்கு கார் வாங்குவது என்பது பெரும் கனவாகவும், நிறைவேறா ஆசையாகவும் இருந்து வருகின்றது.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஓர் பிரீமியம் தர மற்றும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றும் ஓர் கார் மாடலை இளைஞர் ஒருவர் அவரது தந்தைக்கு பரிசாக வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் அவரது தந்தையை ஆச்சரியப்படுத்தும் வகையில் காரை பரிசு வழங்கியது குறித்த வீடியோவை தி ஃபோட்டோவாலா எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

ஸ்கோடா குஷாக் காரை டெலிவரி எடுக்க குடும்பத்தினர் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் வந்து இறங்குவதில் இருந்து அவ்வீடியோ தொடங்குகின்றது. தொடர்ந்து, கேக் துண்டுகளை பரிமாறி அவர்கள் காரை டெலிவரி எடுத்தனர். அவ்வாறு காரை டெலிவரி எடுக்கும்போது இளைஞரின் தந்தை சற்று சென்டிமென்டலாக நடந்துக் கொள்வதை நம்மால் காண முடிகின்றது.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

இதனால், சிறிது நேரம் அந்த ஷோரூமே சென்டிமென்டில் மூழ்கியிருக்கின்றது. தனது தந்தை மற்றும் தாய்க்கு கார் பரிசளிப்பது தனது கனவு என்று இளைஞர் தெரிவித்திருக்கின்றனர். இளைஞர் ஸ்கோடா குஷாக் காரின் ஆக்டிவ் வேரியண்டையே தனது தந்தைக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார்.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

இந்த கார் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஓர் வாகனமாக காட்சியளிக்கின்றது. இரட்டை ஏர்பேக்கு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சிறுவர் இருக்கை மவுண்டுகள், ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூசன் வசதி உடன், எலெக்ட்ரானிக் லாக் சிஸ்டம், டிராக்சன் கன்ட்ரோல், பிரேக் டிஸ்க் வைப்பிங், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரோல் ஓவர் பாதுகாப்பு அம்சம் ஆகியை வழங்கப்பட்டுள்ளன.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

இதுதவிர, ரிமோட் கன்ட்ரோல் மற்றும் மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட சாவி, மேனுவல் ஏர் கன்டிஷனிங், முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் வசதி உடன், ஃபேப்ரிக் இருக்கை, இரட்டை ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல், உயரம் மற்றும் நீளத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், பின் பக்கத்திற்கும் ஏசி வெண்ட் உள்ளிட்டவையும் ஸ்கோடா குஷாக்கில் வழங்கப்பட்டுள்ளன.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

தொடர்ந்து, 50 கிலோவை தாங்கும் திறன் கொண்ட ரூஃப் ரெயில், ரியர் ஸ்பாய்லர், பவர் விண்டோக்கள், எல்இடி பகல்நேர மின் விளக்கு, எல்இடி வால் பகுதி மின் விளக்கு, ஆன்டி கிளேர் விங் கண்ணாடிகள் மற்றும் 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

மேலும், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிக் கொண்ட 7 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆறு ஸ்பீக்கர்கள், பன்முக கன்ட்ரோல் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், பன்முக தகவல்களை வழங்கக் கூடிய திரை உள்ளிட்டவையும் ஸ்கோடா குஷாக் காம்பேக்ட் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளன.

எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்:

ஸ்கோடா குஷாக் ஆக்டீவ் வேரியண்ட் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது 115 பிஎஸ் பவர் மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்கும். இதன் உயர்நிலை வேரியண்ட் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வசதி வழங்கப்படுகின்றது.

அப்பாவுக்கு ஆச்சரிய பரிசு வழங்கிய இளைஞர்... கார் ஷோரூமையே சென்டிமென்டில் மூழ்க வைத்த அந்த தருணம்!

Image Courtesy: THE FOTOWALLA

இத்துடன், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 10.49 லட்சம் தொடங்கி ரூ. 17.59 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஸ்கோடா குஷாக் ஆக்டீவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son gifted skoda kushaq to his dad
Story first published: Friday, October 15, 2021, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X