Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 3 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 6 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம்... ஒரு கிமீ ஓட்டுவதற்கு வெறும் 40 பைசா மட்டுமே செலவு... விலை அதை விட ஆச்சரியம்
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை உள்ளிட்ட முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களின் கவனம் திரும்பி வருகிறது. எனவே புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தங்களது வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி கொள்ள முடியும் என டாடா அறிவித்துள்ளது.

ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா ஏற்கனவே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உள்ளது. இதை தொடர்ந்து அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா தயாராகி வருகிறது.

முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை கூட நாம் பார்த்தோம். இந்த வரிசையில் ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் என்ற நிறுவனமும் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கான முன்பதிவுகளை ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஏற்க தொடங்கியுள்ளது. முன்பதிவு தொகை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்3 (Strom R3) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கு, 4.50 லட்ச ரூபாய் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை விலையாகும்.

இது இரண்டு இருக்கைகளை கொண்ட மூன்று சக்கர வாகனம் ஆகும். இந்த வாகனத்தின் முன் பகுதியில் இரண்டு சக்கரங்களும், பின் பகுதியில் ஒரு சக்கரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த வாகனத்தை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 200 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் ஆகும்.

இந்த புதிய எலெக்ட்ரிக் வாகனத்தில் மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. ஈக்கோ மோடில், 200 கிலோ மீட்டர் ரேஞ்ச் கிடைக்கும். ஆனால் நார்மல் மோடில் 160 கிலோ மீட்டர் ரேஞ்ச் மட்டுமே கிடைக்கும். ஸ்போர்ட்ஸ் மோடில் ரேஞ்ச் 120 கிலோ மீட்டர்களாக குறைந்து விடும். ஸ்ட்ரோம் நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி, ஆர்3 வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 0.40 ரூபாய் மட்டுமே ஆகும்.

அதாவது இந்த வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கான செலவு வெறும் 40 பைசா மட்டும்தான். ஸ்ட்ரோம் ஆர்3 எலெக்ட்ரிக் வாகனத்தில் 15 kW உயர்-திறன் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 90 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்கள்.

ஸ்ட்ரோம் ஆர்3 எலெக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரி 1 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் நீடித்து உழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஸ்ட்ரோம் நிறுவனம் பேட்டரிக்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர்களுக்கான வாரண்டியை வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் மொத்த எடை 550 கிலோ மட்டுமே. இந்த வாகனத்துடன் சார்ஜரும் வழங்கப்படுகிறது.

ஆர்3 மூன்று சக்கர எலெக்ட்ரிக் காரில், ஸ்ட்ரோம் நிறுவனம் பல்வேறு வசதிகளையும் வழங்கியுள்ளது. இதில், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, பவர் விண்டோஸ், க்ளைமேட் கண்ட்ரோல் ஏர்-கண்டிஷனிங், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அத்துடன் இதன் ஓட்டுனர் இருக்கையை 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

அத்துடன் ஆர்3 மூன்று சக்கர எலெக்ட்ரிக் காரில், பெரிய சன் ரூஃப் வசதியையும் ஸ்ட்ரோம் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த மூன்று சக்கர எலெக்ட்ரிக் கார் உங்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். இதன் ரேஞ்ச் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சிறப்பாக உள்ளதுடன், பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு 40 பைசா மட்டுமே செலவு என்ற அம்சம், பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து நிவாரணம் தரும். அத்துடன் இது எலெக்ட்ரிக் வாகனம் என்பதால், பராமரிப்பு செலவும் பெரிதாக இருக்காது. எனவே ஸ்ட்ரோம் ஆர்3 மூன்று சக்கர எலெக்ட்ரிக் கார், தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.