ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல் வாகனம் ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிடில்-கிளாஸ் வாடிக்கையாளர்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் வேகன்ஆர் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

ஜப்பானில் 1.29 மில்லியன் யென் விலையில் புதிய சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல் வாகனம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.8.30 லட்சமாகும். இது ஆரம்ப விலையே.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

அதிகப்பட்சமாக 1.71 மில்லியன் யென் (ஏறக்குறைய ரூ.11.44 லட்சம்) வரையில் இந்த சுஸுகி காருக்கு விலைகள் அந்த நாட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் வேகன்ஆர் ஸ்மைல் காரின் டெலிவிரி பணிகள் இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே துவங்கப்பட உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

ஏற்கனவே கூறியதுதான், மிடில்-கிளாஸ் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ள வேகன்ஆர் ஸ்மைல் வாகனத்தை வருடத்திற்கு 60,000 யூனிட்கள் தயாரிக்க சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட நம் நாட்டில் விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி வேகன்ஆர் ஹேட்ச்பேக் காருக்கு இணையானதாக (45மிமீ மட்டுமே உயரமானது) உள்ளது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

ஆனால் நீளம் சற்று அதிகமாக வழங்கப்பட்டுள்ளதால், மினி-வேன் போன்றதான தோற்றத்தில் வேகன்ஆர் ஸ்மைல் காட்சியளிக்கின்றது. இதன் முன்பக்கத்தில் வட்ட வடிவில் ஹெட்லேம்ப் ஜோடி பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் முன்பக்கத்தில் ரேடியேட்டர் க்ரில் ஆனது க்ரோம்-ஆல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

பக்கவாட்டில் பின் இருக்கை பயணிகள் எளிமையாக உள்ளே நுழைய மற்றும் வெளியே வர, நகர்த்தக்கூடிய கதவுகள் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தின் மேற்கூரை மிகவும் தட்டையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் செங்குத்தான வடிவத்தில் டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக காரின் மினி-வேன் போன்றதான உடலமைப்பிற்கு ஏற்ப இரட்டை-நிற பெயிண்ட்டை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் வேகன்ஆர் ஸ்மைலின் வெளிப்பக்கம் மிகவும் அட்டகாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

வெளிப்பக்கத்தை போல் இதன் உட்புறமும் மிகவும் ஸ்போர்டியான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொழிற்நுட்ப அம்சங்களிலும் வேகன்ஆர் ஸ்மைலில் எந்த குறையுமில்லை. இதன் இரட்டை-நிற டேஸ்போர்டில் பெரிய அளவிலான தொடுத்திரை உடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான சில கண்ட்ரோல்கள் ஸ்டேரிங் சக்கரத்திலும் வழங்கப்பட்டுள்ளன. இதன் இருக்கைகளுக்கு அடியில் பொருட்களை வைப்பதற்கான இட வசதி வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழக்கமானதை போல் அல்லாமல், இம்முறை சில கூடுதல் விபரங்களை வழங்கக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

இவை போதாது என்போர்க்காக வேகன்ஆர் ஸ்மைலில் தனிப்பயனாக்க தொகுப்புகளையும் சுஸுகி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இதற்கான கூடுதல் தொகையை செலுத்துவதன் மூலம் டிகால்கள், பாடி கிட்கள், மேற்கூரை தண்டவாளங்கள், அலாய் சக்கரங்கள் உள்பட ஏகப்பட்ட கூடுதல் ஆக்ஸஸரீகளை பெறலாம்.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

இவற்றின் மூலம் மற்ற வேகன்ஆர் ஸ்மைல் வாகனத்தில் இருந்து கஸ்டமைஸ்ட் செய்யப்படும் வாகனம் தனித்து தெரியும். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வேகன்ஆர் ஸ்மைலில் 657சிசி, 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-இல் 47 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 58என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் சிவிடி கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேனுவல் தேர்வில் வேகன்ஆர் ஸ்மைல் கிடைக்காதாம்.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

இருப்பினும் ஜப்பான் வாடிக்கையாளர்களுக்கு இந்த வாகனத்தை முன்சக்கர-ட்ரைவ் அல்லது அனைத்துசக்கர-ட்ரைவ் தேர்வில் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று விதமான வேரியண்ட்களில் வேகன்ஆர் ஸ்மைல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் டாப் வேரியண்ட்டில் ஹைப்ரீட் பவர்ட்ரெயின் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டிற்கான சுஸுகி வேகன்ஆர் ஸ்மைல்!! மாதத்திற்கு 5,000 யூனிட்கள் தயாரிக்க திட்டம்

உலகளாவிய சந்தைக்காக எஸ்-க்ராஸ் மாடலை அப்டேட் செய்யும் பணியில் சுஸுகி ஈடுப்பட்டு வருகிறது. இந்த வகையில் புதிய எஸ்-க்ராஸ் ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தை பெறவுள்ளதாக சமீபத்தில் நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம். அப்டேட் செய்யப்படும் எஸ்-க்ராஸ் மாடல் முதலாவதாக அடுத்த 2022ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #சுஸுகி #suzuki
English summary
2022 Suzuki WagonR Smile Debuts With New Face, Electric Sliding Doors.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X