இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிடும் தைவானின் ‘ஐ-போன்’ நிறுவனம்!! எலக்ட்ரிக் பேருந்தும் இருக்கு

தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனம் இந்திய சந்தைக்கான எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பு பணிகளில் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிடும் தைவானின் ‘ஐ-போன்’ நிறுவனம்!! எலக்ட்ரிக் பேருந்தும் இருக்கு!

வட ஆசிய நாடுகளுள் ஒன்றான தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐ-போன் உள்பட எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது. இந்த நிறுவனம் தான் தற்போது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கவுள்ளதாகவும், மேலும் இந்திய சந்தையிலும் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

தங்களது முதல் 3 எலக்ட்ரிக் கான்செப்ட் வாகனங்களை வெளியீடு செய்து, இதுகுறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் லியு யங்-வே கருத்து தெரிவிக்கையில், இந்தியா, பிரேசில் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை துவங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இருப்பினும் சில கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தியா மற்றும் பிரேசில் நாட்டு சந்தைகளுக்கான தனது திட்டங்களை விரிவாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் வெளியிடவில்லை. "ஐரோப்பா எலக்ட்ரிக் வாகன போக்குவரத்தில் வேகமாக வளர்ச்சிக்கண்டு வருகிறது. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஐரோப்பாவில் எந்த நாட்டில் என்பதை என்னால் கூற முடியாது" என லியு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிடும் தைவானின் ‘ஐ-போன்’ நிறுவனம்!! எலக்ட்ரிக் பேருந்தும் இருக்கு!

மேலும் பேசிய இவர், தங்களது நிறுவனம் ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனங்களுடனும் ‘நேரடியற்ற' கூட்டணி வைத்துக்கொள்ளவும் தயாராக உள்ளதாக கூறியுள்ளார். உலகின் மிக பெரிய ஐ-போன் அசெம்ப்ளராக விளங்கும் ஃபாக்ஸ்கான், ஏற்கனவே கூறியதுபோல் சமீபத்தில் வெளியீடப்பட்ட அதன் 3 கான்செப்ட் எலக்ட்ரிக் வாகனங்களின் மூலம் எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தில் நுழைந்துள்ளது.

ஃபாக்ஸ்கானின் இந்த 3 எலக்ட்ரிக் வாகனங்களில் மாடல் சி எஸ்யூவி, மாடல் இ செடான் மற்றும் மாடல் டி என்ற எலக்ட்ரிக் பேருந்து என்பவை அடங்குகின்றன. இவை மூன்றிலும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் மாடல் இ செடான் காரானது பந்தய-காருக்கு இணையான ஆக்ஸலரேஷன் மற்றும் சுமார் 750கிமீ தொலைவிற்கு ரேஞ்ச்சை வழங்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடல் டி எலக்ட்ரிக் பேருந்தின் ரேஞ்ச் 400கிமீ-களில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பேருந்து அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களை தங்களது ஃபாக்ஸ்கான் பிராண்டில் வெளியிட விரும்பவில்லை எனவும் இந்த தைவான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிடும் தைவானின் ‘ஐ-போன்’ நிறுவனம்!! எலக்ட்ரிக் பேருந்தும் இருக்கு!

இதனால் வேறொரு பிராண்டின் கீழ் தான் இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் கொண்டுவரப்படும். இதுகுறித்து பேசிய யங்-வே, "எங்களுக்கு தைவானில் புதிய குழந்தை (பிராண்ட்) இல்லை. நாங்கள் படிப்படியாக ஒரு இவி சப்ளை சங்கிலியை உருவாக்கி எங்கள் இவி வன்பொருளை காட்சிப்படுத்தவுள்ளோம்" என தெரித்துள்ளார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஃபிஸ்கர் மற்றும் தாய்லாந்தின் எனர்ஜி க்ரூப் பிடிடி பிசிஎல் உடன் கூட்டணியில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த தைவான் நிறுவனம் முன்னதாக, லார்ட்ஸ்டவுன் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு உற்பத்தி ஆலையை எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்காக அமெரிக்காவில் வாங்கியது.

லார்ட்ஸ்டவுப்ன் மோட்டார்ஸ் அமெரிக்காவில் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் டெஸ்லாவிற்கு போட்டியாக விளங்குகிறது. அதன்பின் கடந்த ஆகஸ்ட்டில் தைவானில் ஒரு சிப் ஆலையை வாங்கியது. இதனால் எதிர்காலத்தில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சிப்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் வழங்கலாம்.

ஜீப், சிட்ரோன் உள்பட பிற கார் பிராண்ட்களை உள்ளடக்கிய ஸ்டெல்லாண்டிஸ் குழுமத்துடன் இணைந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடந்த 2021 மே மாதத்தில் கார் மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழிற்நுட்பங்களை விற்பனை செய்வதற்கான தங்களது திட்டங்களை அறிவித்தது.

Most Read Articles

English summary
iPhone-maker Foxconn Unveils Three New EVs
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X