டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

இந்திய சந்தையில் டாடா ஹாரியர் எஸ்யூவி கார் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

இந்திய சந்தையில் டாடா ஹாரியர் மிகவும் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஒன்றாக உள்ளது. எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் டாடா ஹாரியர் போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 2020ம் ஆண்டின் கடைசி மாதத்தை சிறப்பான விற்பனை வளர்ச்சியுடன் டாடா ஹாரியர் நிறைவு செய்துள்ளது.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,223 ஹாரியர் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 1,458 ஹாரியர் எஸ்யூவி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 52 சதவீத வளர்ச்சியை டாடா ஹாரியர் பதிவு செய்துள்ளது.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

அதே சமயம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், விற்பனையில் 1 சதவீத வளர்ச்சியை டாடா ஹாரியர் பதிவு செய்துள்ளது. ஏனெனில் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,210 ஹாரியர் எஸ்யூவி கார்களை விற்பனை செய்திருந்தது. ஹாரியர் மட்டுமல்லாது, டாடா நிறுவனத்தின் மற்ற கார்களும் சமீப காலமாக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

இதில், அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் டியாகோ ஆகியவை முக்கியமானவை. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், கார்களின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டு வரும் விழிப்புணர்வே இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. டாடா நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

அந்த நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் ஆகிய அல்ட்ராஸ் கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. இதன் காரணமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து வருவதாக கருதப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

டர்போ-பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த புதிய மாடல், ஹூண்டாய் ஐ20 டர்போ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ ஆகிய மாடல்களுடன் நேருக்கு நேராக போட்டியிடும். டிசைனில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லையென்றாலும், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வசதியை இந்த ஐ-டர்போ மாடல் பெற்றுள்ளது.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக புதிய சஃபாரி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன் முதலில் கிராவிட்டாஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷனை, சஃபாரி என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் உறுதி செய்தது.

டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...

டாடா ஹாரியர் எஸ்யூவி காரில் உள்ள அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான், புதிய டாடா சஃபாரி காரிலும் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இன்ஜின் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு அம்சங்களையும் ஹாரியருடன், புதிய சஃபாரி பகிர்ந்து கொள்ளவுள்ளது.

Most Read Articles
English summary
Tata Harrier SUV Sales Increased By 52 Per Cent In December 2020 - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X