டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

டாடா அல்ட்ராஸ் காரின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன மற்றும் அல்ட்ராஸின் பழைய எக்ஸ்.எம் வேரியண்ட் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக எக்ஸ்இ+ என்ற வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸின் அல்ட்ராஸ் விளங்குகிறது. நம் நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் டாப்-3 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் என்று எடுத்து பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் அல்ட்ராஸின் பெயரும் இருக்கும்.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப நிலை ட்ரிம் நிலையாக எக்ஸ்.இ உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.90 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இதற்கு அடுத்த ட்ரிம்-ஆக எக்ஸ்.எம் இருந்தது. ஆனால் ஆரம்ப நிலை எக்ஸ்.இ-க்கும், எக்ஸ்.எம்-க்கும் இடையே விலையில் பெரிய இடைவெளி இருந்தது.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

இதனை சரிக்கட்டும் பொருட்டே, எக்ஸ்.இ+ என்ற ட்ரிம் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் என்ஜின் உடன் இந்த புதிய ட்ரிம்-மின் விலை ரூ.6.35 லட்சமாகவும், டீசல் என்ஜின் உடன் ரூ.7.55 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த புதிய ட்ரிம் நிலையின் வருகையினால் பழைய எக்ஸ்.எம்-இன் விற்பனை நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

சற்று குறைவான விலையில் கொண்டுவருவதற்காக புதிய எக்ஸ்.இ+ ட்ரிம்-மில் சில வசதிகள் அகற்றப்பட்டிருக்கலாம். ஆரம்ப நிலை எக்ஸ்.இ ட்ரிம் உடன் ஒப்பிடுகையில், இந்த புதிய ட்ரிம்-இல் 4-ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் இணைப்பு, எஃப்.எம்/ ஏ.எம் ரேடியோ, யுஎஸ்பி துளை மற்றும் விரைவான யுஎஸ்பி சார்ஜர் உள்ளிட்டவை கூடுதல் வசதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

இவற்றுடன் 8.89 செ.மீ-இல் ஹர்மனின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் புதிய அல்ட்ராஸ் எக்ஸ்.இ+ தனது டேஸ்போர்டில் கொண்டுள்ளது. இவை மட்டுமின்றி, ரிமோட் இல்லா நுழைவு, மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், எலக்ட்ரானிக் வெப்பநிலை கண்ட்ரோல், ஃபாலோ மீ ஹோம் மற்றும் ஃபைண்ட் மீ செயல்பாடு போன்ற அல்ட்ராஸின் வழக்கமான அம்சங்களை இந்த புதிய வேரியண்ட்டும் தொடர்ந்துள்ளது.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

விலையை குறைவாக நிர்ணயிக்க வேண்டி எக்ஸ்.இ+ ட்ரிம்மில் நீக்கப்பட்டுள்ள அம்சங்களாக, பின்பக்க பார்சல் அலமாரி, சக்கர மூடிகள் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த வசதிகளை வேண்டுவோர் எக்ஸ்.எம்+ ட்ரிம்-ஐ வாங்கலாம்.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

இது ரூ.6.85 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.8 லட்சம் (டீசல்) என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது. மேலும் இந்த எக்ஸ்.எம்+ ட்ரிம் நிலையும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது முன்பு இந்த ட்ரிம்-மில் முன்பக்கத்தில் மட்டுமே ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது பின் இருக்கை பயணிகளுக்கும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

ஏற்கனவே கூறியதுதான், ட்ரிம் நிலைகளின் திருத்தியமைப்புகளுடன், ஆரம்ப நிலை எக்ஸ்.இ ட்ரிம்-ஐ தவிர்த்து அல்ட்ராஸின் மற்ற அனைத்து ட்ரிம்-களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வுகள் பெரிய அளவில் இல்லை. ரூ.1,500-இல் இருந்து ரூ.7,000 வரை என மிகவும் குறைவாகவே உள்ளன.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

அதுவே, ஆரம்ப நிலை எக்ஸ்.இ ட்ரிம்-இன் விலை ரூ.10,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்பு ரூ.5,99,900 என இருந்த அல்ட்ராஸின் ஆரம்ப விலை தற்போது ரூ.5,89,900 என குறைந்துள்ளது. இது பெட்ரோல் என்ஜின் உடனான எக்ஸ்.இ ட்ரிம்-இன் விலையே. டீசல் என்ஜின் உடனான விலை ரூ.400 அதிகரிக்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

இதன் காரணமாக, டீசல் என்ஜின் உடன் அல்ட்ராஸின் தற்போதைய ஆரம்ப விலை ரூ.7,04,900 ஆக உள்ளது. இவை மட்டுமின்றி டர்போ என்ஜின் தேர்விலும் இந்த டாடா கார் விற்பனை செய்யப்படுகிறது. டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸின் ஆரம்ப விலை ரூ.8 லட்சத்திற்கு மேல் தற்சமயம் உள்ளது. அல்ட்ராஸின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.65 லட்சமாகும் (டீசல்- எக்ஸ்.இசட்+).

டாடா அல்ட்ராஸின் ஆரம்ப விலை கணிசமாக குறைப்பு!! ரூ.5.90 லட்சத்தில் இனி வாங்கலாம்

அல்ட்ராஸில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடார்க் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ற மூன்று என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இதில் அல்ட்ராஸின் ஐ-டர்போ வேரியண்ட் இந்த ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அல்ட்ராஸிற்கு சந்தையில் விற்பனையில் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

Most Read Articles

English summary
Tata launched new xe plus variant for altroz and price also hiked details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X