டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எத்தனை சதவீதம் வரை டாடா வாகனங்களின் விலை உயர இருக்கின்றது என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் தயாரிப்புகளின் விலையைக் கணிசமாக உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இருக்கும் விலையில் 1.8 சதவீதம் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

இப்புதிய விலையுயர்வு நாளை முதல் (மே 8) அமலுக்கு வர இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால், இன்றைய தினத்திற்குள் புக் செய்பவர்களுக்கு பழைய விலையின் (விலையுயர்வு இல்லாமல்)-படியே புதிய கார்களை டாடா விற்பனைச் செய்ய இருக்கின்றது.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

கார் கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் சைலேஷ் சந்த்ரா கூறியுள்ளார். தொடர்ந்து, புதிய விலையுயர்வு மே7ம் தேதிக்குள் புக் செய்தவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

முன்னதாக கடந்த 2021 ஜனவரியில் ரூ. 26 ஆயிரம் வரை விலையுயர்வை செய்திருந்தது டாடா மோட்டார்ஸ். இதற்கு அடுத்தபடியாக தற்போது மீண்டும் தனது வாகனங்களின் விலையை உயர்த்தும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

டாடாவின் இந்த நடவடிக்கை அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 1.8 சதவீத விலையுயர்வு என்பது மாடல் மற்றும் வேரியண்டைப் பொருத்து ஏற-குறைய அமையும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

கடந்த 2021 ஏப்ரலில் டாடா மோட்டார்ஸின் வாகன விற்பனை கடுமையாக சரிவைச் சந்தித்தது. 2020 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 41 சதவீதம் வரை நிறுவனத்தின் வாகன விற்பனை குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தளவு கடுமையான சரிவை நிறுவனம் சந்தித்திருக்கின்ற வேலையிலும் விலையுயர்வுகுறித்த தகவலை டாடா வெளியிட்டுள்ளது.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

அதேசமயம், டாடா நிறுவனத்தின் புதுமுக வருகையான சஃபாரி எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருவதாகவும் ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. கடந்த மாதம் வெளியாகிய தகவலின்படி, இக்காருக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீடித்து வருவதாக கூறப்படுகின்றது.

டாடா கார்களின் விலை உயர்கின்றன... எத்தனை சதவீதம் உயருகிறது தெரியுமா?.. முடிஞ்சா இன்னைக்கே புக் செஞ்சிடுங்க!

இதுதவிர, டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி மற்றும் ஹாரியர் ஆகிய கார்களுக்கும் கணிசமான காத்திருப்பு காலம் நீடித்து வருகின்றது. மாநிலம் மற்றும் நகரங்களைப் பொருத்து காத்திருப்பு காலம் மாறுபட்டு காணப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tata Motors Announces Price Increase Of 1.8 PerCent Across Range. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X