மிகமிக மலிவு விலையில் டாடாவின் புதிய வர்த்தக வாகனம்! விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

டாடா நிறுவனம் மிக மிக குறைந்த விலையில் ஓர் புதிய வர்த்த வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்நத வர்த்தக வாகன மாடல்களில் ஏஸ் கோல்ட்-ம் ஒன்று. வர்த்தக வாகனதுறையில் குட்டியானை என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த வாகன மாடலிலேயே புதிதாக சிஎக்ஸ் எனும் பெட்ரோல் தேர்வை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

இந்த வாகனத்திற்கு மிகக் குறைந்த விலையாக ரூ. 3.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் வர்த்தக வாகன பிரிவில் எந்தவொரு வாகனமும் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், புதிய டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎக்ஸ் இந்தியாவின் மலிவு விலை கமர்சியல் வாகனமாக களமிறங்கியிருக்கின்றது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் இறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபிளாட் பெட் மற்றும் அரை டெக் லோடு பாடி ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இதில், ஃபிளாட் பெட் உடல்வாகு கொண்ட வாகனத்திற்கே ரூ. 3.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

அரை டெக் லோடு பாடி தோற்றத்திலான ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎஸ் வாகனத்திற்கு ரூ. 4.10 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. குறைந்த விலையை நிர்ணயித்தது மட்டுமின்றி இந்த வாகனத்திற்கு சுலப மாத தவணையை வழங்கவும் டாடா திட்டமிட்டுள்ளது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

இதன்படி ஸ்டேட் பாங்க் இந்தியா வங்கியுடன் இணைந்து 90 சதவீதம் கடன் மற்றும் 7,500 என்ற குறைந்தபட்ச மாத தவணை ஆகிய திட்டங்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இது, குறைந்த விலை வாகனத்தின் பக்கம் வாடிக்கையாளர்களை மேலும் கவர்ந்திழுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

மேலும், இந்த சிறப்பு சலுகைகள் கிராமப்புற வாடிக்கையாளர்களை மட்டுமின்றி நகர்புற வாடிக்கையாளர்களையும் அதிகம் கவர்ந்திழுக்கும் என டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் வாகனத்தில் 694சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

இந்த எஞ்ஜின் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும். டெலிவரி சேவை, லாகிஸ்டிக்ஸ், காய்-கறி ஏற்றி செல்வது, விவசாய பொருட்களை ஏற்றிசெல்வது, மருத்துவம், எல்பிஜி சிலிண்டர்களை ஏற்றி செல்வது போன்ற பல்வேறு பணிகளுக்கு உதவும் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

டாடா நிறுவனம் இந்த புதிய ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎக்ஸ் வாகனத்திற்கு சம்பூர்ணா சேவா 2.0 திட்டத்தின் பல்வேறு சிறப்பு சேவையை வழங்க இருக்கின்றது. சர்வீஸ், வாகன பராமரிப்பு மற்றும் மறு விற்பனை நல்ல பலன் போன்ற கணிசமான சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மிக மிக மலிவு விலையில் டாடா ஏஸ் கோல்டு சிஎக்ஸ் அறிமுகம்! விலை எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் ஒன்னு புக் பண்ண ஆசப்படுவீங்க!

இத்துடன், கூடுதலாக 24X7 ரோட்-சைடு அசிஸ்டண்ட், புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு சேவையையும் வழங்க இருப்பதாக டாடா தெரிவித்துள்ளது. ஆகையால், இந்திய வர்த்தக வாகன துறையில் டாடா ஏஸ் கோல்டு பெட்ரோல் சிஎக்ஸ் வாகனம் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Tata Motors Launches Most Affordable Commercial Vehicle Ace Gold Petrol CX In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X