சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

டாடா மோட்டார்ஸ் அதன் 3 ஆக்ஸில் 31 டன் சிக்னா 3118.டி கனரக வாகனத்தை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் பற்றிய சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

நாட்டின் நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் டாடா நிறுவனம் கனரக வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. இதன் புகழ்வாய்ந்த கனரக வாகன மாடல்களில் சிக்னாவும் ஒன்று. இந்த மாடலின் வரிசையில் புதுமுக ட்ரக் ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா சிக்னா 3118.டி எனும் பெயரில் அவ்வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

இந்த வாகனம் 3 ஆக்ஸில்கள் கொண்ட 31 டன் 6X2 (10 வீல்கள்) வாகனமாகும். இந்தியாவிலேயே இதுமாதிரியான வசதியைக் கொண்ட முதல் வாகனம் இதுவாகும். வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வருவாயை ஈட்டும் வகையில் இவ்வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

அதாவது, அதிக சரக்கை ஏற்றிச் செல்லும் மிகப்பெரிய உடலமைப்பு கொண்ட வாகனமாக இதனை டாடா களமிறக்கியிருக்கின்றது. மேலும், இந்த வாகனத்தை பராமரிப்பது மற்றும் எரிபொருள் செலவு ஆகிய அனைத்தும் குறைவு என்று தெரிவித்திருக்கின்றது.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

அதாவது, 28 டன் வாகனங்களுக்கு இணையான பராமரிப்பு செலவில் இந்த புதிய வாகனத்தைப் பராமரிக்க முடியும் என நிறுவனம் கூறுகின்றது. எனவேதான், இதன் மூலம் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என அதிக நம்பிக்கையுடன் கூறப்படுகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் 28 டன் ட்ரக் பராமரிப்பு செலவில் 45 சதவீத லாபத்தை புதிய 31 டன் வாகனத்தில் பெற முடியுமாம்.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

டாடா நிறுவனம் சிக்னா 3118.டி ட்ரக்கை 12.5 டன் ட்யூவல் டயர் லிஃப்ட் ஆக்ஸில் கான்ஃபிகரேஷனில் கட்டமைத்திருக்கின்றது. ஆகையால், இதன் ஆக்ஸில்கள் கீழ்பக்கத்தில் இருக்கும்போது 31 டன்னையும், ஆக்ஸில்கள் மேல் பக்கத்தில் இருக்கும்போது 18.5 டன்களையும் எளிதில் கையாளம் முடியும். இதுபோன்ற மாறுபட்ட நிலையில் வாகனத்தை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை கணிசமாக பெற முடியுமாம்.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

ஆகையால், பரந்தளவு பயன்பாட்டை வழங்கும் நோக்கிலேயே இத்தகைய வடிவமைப்பு வாகனத்திற்கு டாடா கொடுத்திருக்கின்றது. குறிப்பாக, இதன் லிஃப்ட் ஆக்ஸில்கள் பெரிய டேங்கரை கையாளும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

இதன் மூலம், பெட்ரோலியம், ஆயில் மற்றும் லூப்ரிகன்ட்ஸ், கெமிக்கள், பிட்டூமென், எடிபிள் ஆயில், பால் மற்றும் தண்ணீர் போன்றவற்றைக் கையாள முடியும். எனவே இந்த வாகனத்தை வெறும் சரக்கு வாகனமாக மட்டுமின்றி டேங்கர் வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

சூப்பர் திறனுடைய டாடா சிக்னா 311.8 ட்ரக் இந்தியாவில் அறிமுகம்... நாட்டின் முதல் 3 ஆக்ஸில் 31 டன் கனரக வாகனம்!!

டாடாட நிறுவனம் சிக்னா 3118.டி ட்ரக்கில் பிஎஸ் 6 தரத்திலான 186 எச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இது பத்து வீல்களை இயக்கும் திறன் கொண்டது. இந்த ட்ரக் 24 அடி மற்றும் 32 அடி என இரு வித்தியசமான அளவில் விற்பனைக்குக் கிடைக்கும். எல்எக்ஸ், சிஎக்ஸ் என இதன் வெர்ஷன்களை டாடா குறிப்பிடுகின்றது.

Most Read Articles
English summary
Tata Motors Launches Signa 3118.T Truck In India. Read In Tamil.
Story first published: Wednesday, March 3, 2021, 17:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X