அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு இந்திய சந்தையில் 21,200 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 25,729 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை 21.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை டாடா நெக்ஸானுக்கு இருக்கிறது. இதன் காரணமாக டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 6,007 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 9,211 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டாடா நெக்ஸான் கார் விற்பனையில் 53 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பட்டியலில் அல்ட்ராஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். நெக்ஸானுக்கு அடுத்தபடியாக, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் தன்வசம் வைத்துள்ளது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,772 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,952 ஆக இருந்தது. இது 3 சதவீத வீழ்ச்சியாகும். இது சிறிய அளவிலான வீழ்ச்சிதான் என்பதால், வரும் மாதங்களில் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை உயர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பட்டியலில் டியாகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6,080 ஆக இருந்த டியாகோ காரின் விற்பனை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 5,121 ஆக குறைந்துள்ளது. இது 16 சதவீத வீழ்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது டியாகோ காரின் சிஎன்ஜி வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அடுத்த மாதம் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்களில் டியாகோ சிஎன்ஜி மாடலுக்கு தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை ஹாரியர் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,755 ஹாரியர் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 2,821 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 61 சதவீத வளர்ச்சியை டாடா ஹாரியர் பதிவு செய்துள்ளது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை புதிய சஃபாரி பிடித்துள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1,500 சஃபாரி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதிய டாடா சஃபாரி நடப்பாண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே அதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட முடியாது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பட்டியலில் ஆறாவது மற்றும் கடைசி இடத்தை டிகோர் பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1,406 ஆக இருந்த டாடா டிகோர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 1,304 ஆக குறைந்துள்ளது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் காரின் புதிய எலெக்ட்ரிக் வெர்ஷனை சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அத்துடன் டியாகோ காரை போல், டிகோர் காரின் சிஎன்ஜி வேரியண்ட்டையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் பன்ச் காரை அறிமுகம் செய்தது. இந்த காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

அதிகம் விற்பனையாகும் Tata கார் என்ற பெருமையை பெற்ற Nexon... காரணம் தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

எனவே வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் பன்ச் கார் மிக முக்கிய பங்காற்றலாம் என தெரிகிறது. இது மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும்.

Most Read Articles
English summary
Tata motors model wise september 2021 sales report nexon leads chart
Story first published: Friday, October 22, 2021, 16:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X