Just In
- 9 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 12 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாதுகாப்பான காரை வாங்க சபதமெடுக்கும் இந்தியர்கள்... ராக்கெட் வேகத்தில் முன்னேறும் டாடா மோட்டார்ஸ்...
இந்தியாவில் டாடா கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 27,224 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 12,430 கார்களை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.

துல்லியமாக சொல்வதென்றால், இது 119 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 14,794 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. அதே சமயம் நடப்பாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டாலும், பிப்ரவரியில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்துள்ளது.

ஆனால் இந்த வகையில் பார்த்தால் மிக சிறிய வளர்ச்சியை மட்டுமே டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் 26,980 கார்களை விற்பனை செய்துள்ளது. அதன்பின் வந்த பிப்ரவரி மாதம் 244 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியாகும். சரியாக சொல்வதென்றால், 0.90 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்துள்ளது. சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவதை இந்த புள்ளி விபரங்கள் மூலமாக உணர்ந்து கொள்ளலாம். குறிப்பாக 2021ம் ஆண்டை டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் புதிய சஃபாரி. வெகு சமீபத்தில்தான் சஃபாரி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தற்போது ஒவ்வொரு மாதமும் அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் கார்களாக டியாகோ, அல்ட்ராஸ், நெக்ஸான் ஆகியவை உள்ளன. இவை மூன்றுமே பாதுகாப்பான கார்களாக பெயரெடுத்துள்ளன. குறிப்பாக அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகியவை குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

பாதுகாப்பு தொடர்பாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டு வரும் விழிப்புணர்வே டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்கள் விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய செய்திகளை நாம் பலமுறை கேள்விபட்டுள்ளோம்.

மேற்கண்ட கார்கள் தவிர நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.