டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

முழுவதும் தொடுதல் மூலமாகவே செயல்படுத்தக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் டாடா அல்ட்ராஸ் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

இந்திய சந்தையில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மிக விரைவாகவே டாடா அல்ட்ராஸ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. இதன் காரணமாக அல்ட்ராஸில் புதிய புதிய அப்கிரேட்களை டாடா நிறுவனம் தொடர்ந்து கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

இந்த வகையில் சமீபத்தில் ஐ-டர்போ என்ற பெயரில் அல்ட்ராஸின் டர்போ பெட்ரோல் வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஹேட்ச்பேக் காரின் கேபினில் முக்கிய அப்கிரேட் கொண்டுவரப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

அதாவது காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வதற்கு முன்னர் பொத்தான்கள் டேஸ்போர்டில் மைய ஏசி துளைகளுக்கு கீழே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த பொத்தான்கள் & க்னாப்கள் என அனைத்தும் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் வெறுமனே 'அல்ட்ராஸ்' லோகோ ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

பொத்தான்களுக்கு மாற்றாக இனி அல்ட்ராஸின் 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை தொடுதல் மூலமாக கட்டுப்படுத்தலாம். க்னாப்கள் சிஸ்டத்தின் சத்தத்தை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

தற்போது அவையும் திரையிலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மாற்றம் அல்ட்ராஸிற்கு முன்பாகவே டாடாவின் பிரபலமான காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸானில் வழங்கப்பட்டுவிட்டது. அப்போது இந்த மாற்றத்தினால் என்னென்ன அசவுகரியங்கள் & சவுகரியங்கள் உள்ளன என்பதை கூறியிருந்தோம்.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

அதாவது, இவ்வாறு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முழுவதுமாக டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதால், மொத்த கேபினும் கூடுதல் அழகாக காட்சியளிக்கும். ஆனால் தொடுதல் மூலமாக திரை செயல்படும் என்பதால் இயக்கத்தின் போது சாலையில் இருந்து பார்வையை இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கு திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

அதுமில்லாமல் திரையில் ஐகான்கள் மிகவும் சிறியதாக இருக்கும், அதனால் உன்னிப்பாக திரையை பார்க்க வேண்டும். அதுவே பொத்தான்கள் என்றால், எந்தெந்த பொத்தான் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பது தெரியும். அதனால் பார்வையை சாலையில் திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படாது.

டாடா அல்ட்ராஸிலும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்!! இனி பொத்தான்கள் கிடையாது...

இதனால் ஒரு சிலருக்கு இந்த புதிய வசதி சவுகரியமானதாகவும், சிலருக்கு அசவுகரியமானதாகவும் இருக்கலாம். ஆட்டோ ட்ரெண்ட் டிவி என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கு மேலே 'ஹர்மன்' பிராண்டின் லோகோவை பார்க்கலாம்.

Image Courtesy: AutoTrend TV

இந்த அப்கிரேட் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. நமக்கு தெரிந்த வரையில் இந்த அப்கிரேட் அல்ட்ராஸின் எக்ஸ்டி வேரியண்ட்டில் இருந்து வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Tata Altroz Touchscreen Buttons Removed, Arrives At Dealer Showroom.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X