தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று (செப்.27) தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் தலைமை செயலகத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பிற்கான காரணத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறவுள்ளது தான் கடந்த சில வாரங்களாக இந்திய ஆட்டோமொபைல் துறையில் முக்கிய செய்தியாக இருந்து வருகிறது. போதிய விற்பனை இல்லாததினால் இந்தியாவில் இருந்து விடைபெற்று செல்வதாக ஃபோர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

இந்த அறிவிப்பால் ஃபோர்டு பிராண்டில் இருந்து அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட அத்தனை புதிய கார்களின் அறிமுகங்களும் (முழுவதுமாக தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்படும் லக்சரி கார்களை தவிர்த்து) ரத்தாகி உள்ளன.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் குஜராத்தில் ஒன்றும், நமது சென்னையில் ஒன்றும் என இரு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பெரும்பான்மையான தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் குஜராத், சனந்த் தொழிற்சாலை தான் முதலாவதாக, இந்த 2021ஆம் ஆண்டிற்குள் மூடப்பட உள்ளது.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

இதற்கடுத்ததாகவே சென்னை தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் நிறுத்தி கொள்ளப்பட உள்ளன. இதனால் ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை முழுவதுமாக மூடப்படுவதற்குள் அடுத்த ஆண்டில் பாதி மாதங்கள் கடந்துவிடும். இருப்பினும் ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரிந்த வந்த பணியாளர்களுக்கு வேலை பறிப்போக உள்ளது உறுதியாகிவிட்டது.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

இதனாலேயே இப்போதில் இருந்து ஃபோர்டு நிறுவன பணியாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற துவங்கிவிட்டனர். சென்னையில், மறைமலைநகரில் ஃபோர்டு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை மற்றொரு நிறுவனத்திற்கு கைமாற்றிவிட தயாராகிவரும் இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் இதற்காக நமது தமிழக அரசின் உதவியை நாடியது.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

இதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் உடனான டாடா மோட்டார்ஸ் அதிகாரிகளின் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக் உடன் டாடா நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க & பொது விவகாரங்களுக்கான தலைவர் சுஷாந்த் நாயக் மற்றும் டாடா தெற்கு பிராந்திய மேலாளர் கே.ஜி.பிரசாத் மற்றும் பிற நிர்வாகிகள் உடன் சென்றனர்.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

இதனால், ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை வாங்கவே டாடா அதிகாரிகள் தமிழக முதல்வரை சந்தித்திருக்க வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது, முதல்வர் டாடா அதிகாரிகளுக்கு உறுதி ஏதேனும் அளித்துள்ளாரா என்பது போன்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் இந்த சந்திப்பில் இரு தரப்பினரும் என்ன பேசி கொண்டனர் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸுக்கு இந்தியாவில் ஜாம்ஷெட்பூர், பந்த் நகர், லக்னோ, சனந்த், தார்வாட் மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளில் வணிக வாகனங்கள் & பயணிகள் கார்கள் என இரண்டிற்குமான தொழிற்சாலைகள் உள்ளன.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

இருந்தாலும் ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டார்கெட் செய்திருப்பதற்கு வாய்ப்புள்ளது. தமிழக அரசின் பார்வையில், டாடா மோட்டார்ஸ் போன்ற ஒரு வளர்ந்த பிராண்டை அதன் ஆதிக்கத்தில் வரவேற்பதில் நிச்சயமாக மகிழ்ச்சி அடையும்.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

அதுமட்டுமில்லாமல், ஃபோர்டு நிறுவனத்திற்கும் ஒரு தீர்வினை தமிழக அரசு வழங்க வேண்டியது அதன் கடமை அல்லவா. டாடா மோட்டார்ஸ் அதிகாரிகளின் இந்த தமிழக முதல்வர் உடனான சந்திப்பில் ஏதேனும் ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டால், ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை டாடா நிறுவனத்தின் கைக்கு செல்லலாம்.

தமிழக முதல்வரை சந்தித்து பேசிய டாடா அதிகாரிகள்!! ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை கை மாறுகிறதா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், இவ்வாறு மூடப்படும் தொழிற்சாலையை வாங்குவது இந்த நிறுவனத்திற்கு ஓர் செலவு குறைந்த விஷயமாக இருக்கும். இதற்கிடையில் எலெக்ட்ரானிக் உதிரி பாகங்களுக்காக ஓசூரில் கிட்டத்தட்ட 5,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக டாடா குழுமம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் அடுத்ததாக அதன் மைக்ரோ-எஸ்யூவி காராக பஞ்ச்-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Most Read Articles

English summary
Tata Motors team meets Tamil Nadu Chief Minister MK Stalin at Secretariat in Chennai.
Story first published: Monday, September 27, 2021, 21:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X