Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அனைத்து கார்களிலும் ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம்: டாடா மோட்டார்ஸ் அதிரடி
அனைத்து கார்களிலும் கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா கார்களின் கட்டமைப்புக் கொள்கை, டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் வேற லெவலுக்கு மாறி வருகின்றன. அந்நிறுவனத்தின் புதிய கார்கள் பாதுகாப்பு அம்சங்களிலும் போட்டியாளர்களைவிட சிறப்பாக உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கார் சந்தையில் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் புதிய டிரென்டாக மாறி இருக்கிறது. அதாவது, ரிமோட் முறையில் காரின் பல தகவல்களையும், கட்டுப்படுத்தும் வாய்ப்பையும் இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்குகிறது.

இதற்காக, கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சிம்-கார்டு ஒன்று பொருத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக, மொபைல்போன் அல்லது காருக்காக வழங்கப்படும் பிரத்யேக ஸ்மார்ட்வாட்ச் மூலமாக காரின் இயக்கம் குறித்த தகவல்கள், பழுது தகவல்கள், ரிமோட் முறையில் காரின் குறிப்பிட்ட வசதிகளை கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன், கார் இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கும், கார் திருடுபோனால் அதன் இடத்தை கண்டறிவதற்கும் பயன்படுகிறது. மேலும், கார் குறிப்பிட்ட எல்லையை விட்டு வெளியே செல்லாத வகையிலும் கட்டுப்படுத்தும் வசதியை பெற முடியும்.

இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதாவது, பொழுதுபோக்கு வசதிகளுக்கு மட்டுமின்றி, காரின் சில வசதிகளை ரிமோட் முறையில் கட்டுப்படுத்துவதற்கும், பழுது குறித்த தகவல்களை பெறுவதற்கும் வாய்ப்பு தருகிறது.

புதிதாக அறிமுகமாகும் பல கார் மாடல்களில் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த காரில் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வு மட்டுமின்றி, கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கிறது. இதன்மூலமாக பல்வேறு வசதிகளை பெற முடியும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் ஐரா(iRA) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே நெக்ஸான் எஸ்யூவியில் வழங்கப்படும் இந்த புதிய கனெக்டெட் கார் தொழில்நுட்பம் அல்ட்ராஸ் காரின் டர்போ மாடலில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த தொழில்நுட்ப வசதியை பிற கார்களிலும் வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா கூறி இருக்கிறார். விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய சஃபாரி எஸ்யூவியிலும் இந்த புதிய கனெக்டெட் கார் தொழில்நுட்பம் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, ஹாரியர் உள்ளிட்ட பிற டாடா கார் மாடல்களின் டாப் வேரியண்ட்டில் இந்த ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு அதிக பயனையும், மதிப்பையும் அளிக்கும் விஷயமாக இருக்கும். அதேநேரத்தில், டாடா டியாகோ உள்ளிட்ட மாடல்களில் இந்த வசதி வழங்கப்படுமா என்பது சந்தேகமான விஷயமாக உள்ளது.

டாடா மோட்டார்ஸின் ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தின் மூலமாக காரின் கதவுகளை மூடுவது, திறப்பது, ஹெட்லைட்டுகளை ஆன் செய்து, ஆஃப் செய்வது, காரில் இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம், கார் எங்கு இருக்கிறது, கார் எஞ்சினை ரிமோட் முறையில் ஆஃப் செய்வதற்கான வசதி, விபத்து சமயத்தில் அவசர உதவி கோரும் வசதி, ஜியோ ஃபென்சிங் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகளை பெற முடியும்.

வரும் 22ந் தேதி புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் 26ந் தேதி புதிய டாடா சஃபாரி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கார்களிலுமே ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்ப வசதி இடம்பெறும்.