அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

நெக்ஸான் டீசல் கார்கள் விற்பனையாகும் எண்ணிக்கைக்கு இணையாக நெக்ஸான் எலக்ட்ரிக் கார்களும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த டாடா மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரியின் பேட்டியினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

இந்திய சந்தையில் தற்சமயம் பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் ஒரே மாடலாக டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி விளங்குகிறது.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

இதனால் எரிபொருள் என்ஜின் உடன் வாங்கும் அதேநேரம் நெக்ஸானை எலக்ட்ரிக் மோட்டார் உடனும் பெறலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை தற்போதுதான் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

இருப்பினும் தற்போதைய சூழலிலும் டீசல் என்ஜினுடன் விற்பனையாகும் அளவிற்கு எலக்ட்ரிக் வெர்சனிலும் நெக்ஸான் விற்பனையாகுவது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி உறுதிப்படுத்தியுள்ளார்.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

இதுகுறித்து அவர் பேசுகையில், உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நெக்ஸானுக்காக கிட்டத்தட்ட அதன் டீசல் மாடலுக்கு இணையான எண்ணிக்கையில் முன்பதிவுகளை பெறுகிறது. மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும் ஃபேம்-2 நன்மைகள் மற்றும் மானியங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன என தெரிவித்துள்ளார்.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

இதனால் பிராண்டின் ஒட்டு மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் நெக்ஸான் இவி-யின் பங்கு 5 சதவீதமாக அதிகரிக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 650 நெக்ஸான் இவி-களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

அறிமுகத்தில் இருந்து இதுவரையில் ஒரு மாதத்தில் விற்கப்பட்ட நெக்ஸான் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையில் 2021 ஜூலை மாத 650 யூனிட்களின் விற்பனை எண்ணிக்கை தான் அதிகமாகும். 2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 1,716 நெக்ஸான் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

இந்த நிலையில் சமீபத்தில் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் டார்க் எடிசன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நெக்ஸான் இவி-யில் நிரத்தரமான காந்தக டிசி மோட்டார் இணைக்கப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 127 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் 30.2kWh, அதி-மின்னழுத்த, லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இவற்றுடன் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 9.9 வினாடிகளில் எட்டிவிட முடியும் என்கிறது டாடா மோட்டார்ஸ்.

அட இது சூப்பரான விஷயமாச்சே!! டீசல் மாடலுக்கு இணையாக விற்பனையாகும் டாடா நெக்ஸான் இவி!

நார்மல் & ஸ்போர்ட் என்ற இரு விதமான வேரியண்ட்களில் நெக்ஸான் இவி விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. அதேநேரம் ரூ.29,999 என்கிற குறைந்த மாதத்தவணை திட்டத்திலும் நெக்ஸானை வாடிக்கையாளர்களுக்கு டாடா நிறுவனம் வழங்கி வருகிறது.

Most Read Articles
English summary
Tata Nexon EV has managed to register equal demand for itself as its diesel counterpart.
Story first published: Friday, July 30, 2021, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X