விற்பனையில் செம்ம வளர்ச்சி! எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல! Tata Nexon EVக்கு கிடைத்த அங்கீகாரம்!

Tata Nexon EV எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனையில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய தகவலைக் கீழே காணலாம்.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வரும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் நெக்ஸான் இவி (Nexon EV)-ம் ஒன்று. இந்த எலெக்ட்ரிக் காரே தற்போது இந்தியாவில் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை எந்தவொரு எலெக்ட்ரிக் காரும் எட்டிராத ஓர் மிக சிறந்த விற்பனை சாதனையை நெக்ஸான் செய்திருக்கின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் இதுவரை 10 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவில் விற்பனையாகும் ஒட்டுமொத்த மின்சார கார்களின் எண்ணிக்கையில் 70 சதவீதம் பங்காகும்.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

கடந்த ஒரே மாதத்தில் மட்டும் டாடா நெக்ஸான் இவி மின்சார கார் ஒட்டுமொத்தமாக 1,022 யூனிட்டுகள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரே மாதத்தில் இத்தகைய அதிக எண்ணிக்கையில் நெக்ஸான் இவி விற்பனையாவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய அமோக விற்பனை வளர்ச்சியை அடுத்து தற்போது புதிய மைல் கல்லாக 10 ஆயிரம் விற்பனை எண்ணிக்கையை அக்கார் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனைகுறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வணிக பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது, "சாலையில் தற்போது 10 ஆயிரம் மின்சார கார்கள் பயன்பாட்டில் இருப்பது எங்களின் புதுமையான மின்சார வாகனங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை எதிரொலிக்கும் வகையில் இருக்கின்றது. மின் வாகன பயன்பாட்டை நாடுவோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருப்பதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம். எங்களது பிராண்டின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்றார்.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் பயன்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 120க்கும் மேற்பட்ட நகரங்களில் 700க்கும் அதிகமான அதிநவீன சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்றதொரு நடவடிக்கையில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எக்ஸ்எம் (XM), எக்ஸ்இசட் ப்ளஸ் (XZ+), எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் (XZ+ Lux) மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் டார்க் (XZ+ Dark), எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் டார்க் (XZ+ Lux Dark) ஆகிய தேர்வுகளில் நெக்ஸான் இவி விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், டார்க் எனும் பெயரில் கிடைக்கும் தேர்வுகள் பிரத்யேக நிற அலங்காரிப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நெக்ஸான் இவி காரின் விலை விபரத்தை பட்டியலாகக் கீழே காணலாம்.

Variants Price
XM ₹13.99 Lakh
XZ+ ₹15.65 Lakh
XZ+ LUX ₹16.65 Lakh
XZ+ Dark ₹15.99 Lakh
XZ+ Lux Dark ₹16.85 Lakh
விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

அண்மையில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலையை டாடா மோட்டார்ஸ் உயர்த்தியது. உயர் நிலை தேர்வுகளான எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகியவற்றின் விலை மட்டுமே ஏற்பட்டன. ஆகையால், இதன் ஆரம்ப நிலை வேரியண்ட் எந்த மாற்றமும் இன்றி ரூ. 13.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை ஒரு முறை முழுமையாக சார்ஜில் 312கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுவே இந்த எலெக்ட்ரிக் காரின் முழு ரேஞ்ஜாகம். இது அராய் (ARAI) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலாகும். இக்காரில் 30.2kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை இப்பேட்டரியே வழங்குகின்றது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

நெக்ஸான் இவி பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை எட்டுவதற்கு வெறும் 9.58 செகண்டுகளே போதுமானதாக இருக்கின்றது. இந்த மின்சார காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்யும்போது 0-த்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றுவதற்கு ஒரு மணி நேரமே போதுமானது. அதுவே வழக்கமான சார்ஜிங் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் பல மணி நேரங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விற்பனையில் செம்ம வளர்ச்சி... எந்த எலெக்ட்ரிக் காரும் இப்படி விற்பனையாகல... Tata Nexon EV தரத்திற்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!

தற்போது டாடா நெக்ஸான் இவி பெற்றிருக்கும் விற்பனை எண்ணிக்கையானது, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தற்போது இந்திய சாலைகளை பெட்ரோல், டீசலால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனங்கள் ஆளுகைச் செய்வதைப் போல எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் நாட்டின் அனைத்து சாலைகளையும் ஆளும் என்பதும் தெரிகின்றது.

Most Read Articles
English summary
Tata nexon ev records 10000 unit retail sales in india
Story first published: Friday, September 24, 2021, 18:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X