ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

இந்தியாவில் மிக விரைவில் அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்குறித்த தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. பெட்ரோலின் விலை ரூ. 100ஐக் கடந்தும், டீசல் விலை ரூ. 94ஐக் கடந்தும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையால் மக்கள் மாற்று வாகனங்களின் பக்கம் சாய தொடங்கியிருக்கின்றனர்.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

அதாவது, பெட்ரோல்-டீசலால் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி, எல்பிஜி) மற்றும் மின்சார வாகனங்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் அதிகளவில் சிஎன்ஜி கார்கள் அதிகளவில் விற்பனையாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

மாருதி நிறுவனத்தின் சிஎன்ஜி வாகனங்கள் மட்டும் 2021 நிதியாண்டில் 1.57 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது 45 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இவ்வாறு, நாளுக்கு நாள் சிஎன்ஜி வாகனங்களுக்கான வரேவற்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

இந்த நிலையை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் பிரபல மாடல்களில் சிஎன்ஜி தேர்வுகளை அளிக்க தயாராகி வருகின்றன. அந்தவகையில், மிக விரைவில் இந்திய சந்தையை சிஎன்ஜி தேர்வில் களக்க இருக்கும் கார் மாடல்கள் எது என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி:

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஸ்விஃப்ட்-ம் ஒன்று. இந்த கார் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களிலும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க மாடலிலேயே சிஎன்ஜி தேர்வை வழங்க இருக்கின்றது மாருதி சுசுகி.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இந்த தேர்வு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் தற்போது 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனுடன் விற்பனையில் இருக்கின்றது. இது 23.20 கிமீ தொடங்கி 23.76கிமீ வரை மைலேஜை வழங்கும். இதைவிட பல மடங்கு அதிக மைலேஜ் திறனை சிஎன்ஜி வசதிக் கொண்ட எஞ்ஜின் வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

மாருதி சுசுகி டிசையர்:

மாருதி சுசுகி நிறுவனம் மிக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் சிஎன்ஜி கார் மாடல்களில் டிசையர்-ம் ஒன்று. இந்த கார் மாடலிலும் நிறுவனம் 1.2 லிட்டர் கே12எம் ட்யூவல்ஜெட் எஞ்ஜினையே பயன்படுத்த இருக்கின்றது. அதாவது, மேலே பார்த்த ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில் இடம் பெற எஞ்ஜினே டிசையர் காரிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

டாடா நெக்ஸான்:

டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் நெக்ஸானும் ஒன்று. இந்த காரை டாடா மோட்டார்ஸ் எரிபொருளால் இயங்கும் வாகனமாக மட்டுமில்லாமல் எலெக்ட்ரிக் வாகனமாகவும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

இதனைத் தொடர்ந்து நிறுவனம் மிக விரைவில் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. டாடாவின் 1.2லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் இந்த எஞ்ஜின் 86 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றுகின்றது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

டாடா டியாகோ :

டாடா நிறுவனம் மிக விரைவில் அதன் டியாகோ கார் மாடலையும் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. தனது தொழிற்சாலையில் வைத்து சிஎன்ஜி கிட்டை ஃபிட் செய்து இந்த காரை விற்பனைச் செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

டாடா டிகோர்:

டாடா நிறுவனத்தின்கீழ் விரைவில் வெளிவர இருக்கும் மற்று மொரு சிஎன்ஜி காராக டிகோர் இருக்கின்றது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே எஞ்ஜின்தான் மேலே பார்த்த டியாகோ சிஎன்ஜிலும் இடம் பெற இருக்கிறது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

ஹோண்டா அமேஸ்:

ஹோண்டா நிறுவனம் அதன் அமேஸ் காரை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் வரும் 17ம் தேதி அறிமுகமாக இருக்கின்றது. ஆனால், சிஎன்ஜி அமேஸ் காரின் அறிமுகம் பற்றிய விபரம் வெளியாகவில்லை. மிக விரைவில் இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரொம்ப சீக்கிரமே அறிமுகமாக இருக்கும் சிஎன்ஜி கார்கள்... டாடா நெக்ஸான் தொடங்கி டொயோட்டா இன்னோவா வரை!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா:

டொயோட்டா நிறுவனம் அதன் இன்னோவா க்ரிஸ்டா காரை சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நாட்டின் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் இன்னோவா க்ரிஸ்டாவும் ஒன்று. இதில் சிஎன்ஜி தேர்வு விற்பனைக்கு வரவிருப்பது எம்பிவி ரக கார் பிரியர்களின் மத்தியில் நல்ல ஈர்ப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2.7 லிட்டர் ட்யூவல் விவிடி-ஐ பெட்ரோல் எஞ்ஜினிலேயே சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Nexon To Toyota Innova Crista Upcoming CNG Cars In India: Here Is Full List. Read In Tamil.
Story first published: Tuesday, July 27, 2021, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X