டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 1,751 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 413 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 29,778 கார்களை விற்பனை செய்துள்ளது. இது எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் வழக்கமான பெட்ரோல், டீசல் கார்கள் என ஒட்டுமொத்த கார்களின் விற்பனை எண்ணிக்கையாகும். அதே நேரத்தில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 21,641 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதாவது 8,137 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. சதவீத அடிப்படையில் பார்த்தால், இது 37.60 சதவீத வளர்ச்சியாகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்த 29,778 கார்களில், வழக்கமான ஐசி இன்ஜின் கார்களின் (பெட்ரோல், டீசல் கார்கள்) எண்ணிக்கை 28,027 ஆகும்.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,751 எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 29,778 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையும் 32 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 21,228 பெட்ரோல், டீசல் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில், டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர், சஃபாரி மற்றும் பன்ச் ஆகிய ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் டிகோர் மற்றும் நெக்ஸான் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கார்களில் பன்ச் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆகும்.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், பாதுகாப்பு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற 3 மேட் இன் இந்தியா கார்களை விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இருக்கிறது.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பன்ச் ஆகிய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. இதன் காரணமாகவே இந்த கார்களின் விற்பனை இந்தியாவில் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தற்போது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். புதிய கார் வாங்கும்போது, அந்த கார் மோதல் சோதனைகளில் எத்தனை ஸ்டார்களை வாங்கியுள்ளது? என்பதையும் கூட பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்குதான் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 'டிக்' அடிக்கின்றனர்.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தற்போதைய நிலையில் இந்தியா உள்பட உலகளாவிய அளவில் செமிகண்டக்டர் சிப்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விற்பனை குறைந்துள்ளது. ஆனால் இப்படிப்பட்ட சூழலிலும் கூட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருவது கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.

டாடா செய்த தரமான சம்பவம்... வாயை பிளந்து பார்க்கும் போட்டி நிறுவனங்கள்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்பட்டுள்ளது. இதுதவிர பன்ச் காரின் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
Tata passenger vehicle november 2021 sales report
Story first published: Thursday, December 2, 2021, 7:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X