இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான டாடா பன்ச் கார், நம்ப முடியாத குறைவான விலையில் நாளை விற்பனைக்கு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பன்ச் (Tata Punch) காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளை (அக்டோபர் 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். டாடா பன்ச் கார் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டது. அத்துடன் டாடா பன்ச் காருக்கு முன்பதிவுகளும் ஏற்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை பன்ச் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அந்த அளவிற்கு டாடா பன்ச் கார் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி கிடக்கிறது. அப்படிப்பட்ட டாடா பன்ச் கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

ஆல்ஃபா பிளாட்பார்ம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்பார்ம் (Agile Light Flexible Advanced - ALFA) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது கார் பன்ச். இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு வெளிவந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் அல்ட்ராஸ். ஒரே பிளாட்பார்ம் என்பதால், டாடா பன்ச் மற்றும் டாடா அல்ட்ராஸ் கார்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

டாடா அல்ட்ராஸ் காரை போலவே, டாடா பன்ச் காரிலும் 90 டிகிரி ஓபனிங் டோர்கள் (90-degree-opening Doors) இடம்பெற்றிருப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். வரும் காலங்களிலும் ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

கவர்ச்சிகரமான டிசைன்

டாடா ஹாரியர் காரின் டிசைனை மனதில் வைத்து பன்ச் காரை டிசைன் செய்துள்ளனர். குறிப்பாக டாடா பன்ச் காரின் முன் பக்க டிசைன், டாடா ஹாரியரை நினைவுபடுத்துகிறது. அத்துடன் டாடா பன்ச் காரை சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் டிசைன் நிச்சயமாக சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கும்.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

ஏனெனில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் ஸ்டூடியோக்கள் ஒன்றிணைந்து இந்த டிசைனை உருவாக்கியுள்ளன. சமீப காலமாக வெளிவரும் டாடா மோட்டார்ஸ் கார்களின் டிசைன் கவர்ச்சிகரமாக உள்ளது. அதற்கு புத்தம் புதிய டாடா பன்ச் காரும் விதிவிலக்கு அல்ல.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

இன்ஜின்

டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3, பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் (17க்கு 16.45 புள்ளிகள்), குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் டாடா பன்ச் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் குளோபல் என்சிஏபி சோதனை செய்த 'மேட் இன் இந்தியா' கார்களிலேயே டாடா பன்ச்தான் மிகவும் பாதுகாப்பானது.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

ஆஃப் ரோடு பயணங்களுக்கும் ஓரளவிற்கு ஓகே

இது வெறும் ஃப்ரண்ட் வீல் டிரைவ் கார் என்றாலும் கூட, ஓரளவிற்கு ஆஃப் ரோடு திறன்களை பெற்றுள்ளது. டாடா பன்ச் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 187 மிமீ ஆகும். அதே நேரத்தில் டாடா பன்ச் காரின் ஏஎம்டி வேரியண்ட்களில், 'ட்ராக்ஸன் ப்ரோ' மோடு வழங்கப்பட்டுள்ளது. வழுக்க கூடிய மேற்பரப்புகளில் கார் 'ஸ்மூத்' ஆக பயணிப்பதற்கு இது உதவுகிறது.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

எதிர்பார்க்கப்படும் விலை

டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா பன்ச் கார் நிச்சயமாக விற்பனையில் புதிய சாதனைகளை படைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்... நம்ப முடியாத குறைவான விலையில் நாளை அறிமுகமாகிறது பன்ச்... டாடாவுக்கு சல்யூட்

டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மாதங்களில் பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Tata punch micro suv heres everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X