இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் Tata Punch அறிமுகம்... உடனே வாங்க தோணுது

இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை பெற்றுள்ள டாடா பன்ச், மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா பன்ச் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

இந்த எஸ்யூவி லைன்-அப்பிற்கு வலு சேர்க்கும் வகையில், புதிய டாடா பன்ச் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டாடா பன்ச் காருக்கு இந்தியாவில் ஏற்கனவே முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் அல்லது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பன்ச் காரை முன்பதிவு செய்யலாம்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

முன்பதிவு தொகை 21 ஆயிரம் ரூபாய் ஆகும். ப்யூர் (Pure), அட்வென்ஜர் (Adventure), அக்காம்ப்ளிஸ்டு (Accomplished) மற்றும் க்ரியேட்டிவ் (Creative) என மொத்தம் 4 வேரியண்ட்களில் டாடா பன்ச் கார் கிடைக்கும். இதில், ப்யூர் வேரியண்ட்டில், ஆர்கஸ் ஒயிட் மற்றும் டேடோனா க்ரே ஆகிய வண்ண தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

அதே நேரத்தில் அட்வென்ஜர் வேரியண்ட்டில், ஆர்கஸ் ஒயிட், டேடோனா க்ரே, ட்ராபிக்கல் மிஸ்ட் மற்றும் அட்டாமிக் ஆரஞ்ச் ஆகிய வண்ண தேர்வுகள் வழங்கப்படும். அதே சமயம் அக்காம்ப்ளிஸ்டு வேரியண்ட்டில், ஆர்கஸ் ஒயிட், டேடோனா க்ரே, ட்ராபிக்கல் மிஸ்ட், அட்டாமிக் ஆரஞ்ச் மற்றும் மீட்டியோர் ப்ரோன்ஸ் ஆகிய வண்ண தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

க்ரியேட்டிவ் வேரியண்ட்டில், ஆர்கஸ் ஒயிட் (கருப்பு நிற மேற்கூரையுடன்), டேடோனா க்ரே (கருப்பு நிற மேற்கூரையுடன்), ட்ராப்பிக்கல் மிஸ்ட் (கருப்பு நிற மேற்கூரையுடன்), அட்டாமிக் ஆரஞ்ச் (கருப்பு நிற மேற்கூரையுடன்), மீட்டியோர் ப்ரோன்ஸ் (கருப்பு நிற மேற்கூரையுடன்), டொராண்டோ ப்ளூ (வெள்ளை நிற மேற்கூரையுடன்), கேலிப்ஸோ ரெட் (வெள்ளை நிற மேற்கூரையுடன்) ஆகிய வண்ண தேர்வுகள் வழங்கப்படும்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

டாடா பன்ச் காரின் வெளிப்புறத்தை பொறுத்தவரை, எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், 16 இன்ச் டைமண்ட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 90 டிகிரி ஓபனிங் டோர்கள் (90-degree Opening Doors) அம்சத்தையும் டாடா பன்ச் கார் பெற்றுள்ளது.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

அதே நேரத்தில் டாடா பன்ச் காரின் கேபினில், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல், 7 இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே உடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

மேலும் மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையில் ஓட்டுனர் இருக்கை, கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகிய வசதிகளும் டாடா பன்ச் காரில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியையும் டாடா பன்ச் கார் பெற்றுள்ளது. அதே சமயம் டாடா பன்ச் காரில் வழங்கப்படும் ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம் மூலம் 25க்கும் மேற்பட்ட கனெக்டிவிட்டி வசதிகளை பெற முடியும்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்பார்ம் ALFA (Agile Light Flexible Advanced) அடிப்படையில் பன்ச் கார் உருவாக்கப்பட்டுள்ளது. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இமாலய சாதனையை படைத்துள்ளது.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த காலங்களில் நிறைய 'மேட் இன் இந்தியா' கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. குளோபல் என்சிஏபி இதுவரை சோதனை செய்த 'மேட் இன் இந்தியா' கார்களிலேயே டாடா பன்ச்தான் மிகவும் பாதுகாப்பானது. இது வாடிக்கையாளர்களை அதிகம் கவரக்கூடிய அம்சமாக இருக்கும்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

டாடா பன்ச் காரில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் உடன் இந்த இன்ஜினை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

டாடா பன்ச் காரில், சிட்டி மற்றும் ஈக்கோ ஆகிய டிரைவிங் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஏஎம்டி வேரியண்ட்களில் ட்ராக்ஸன் ப்ரோ மோடும் வழங்கப்பட்டுள்ளது. வழக்க கூடிய தரைகளில் டாடா பன்ச் கார் 'ஸ்மூத்' ஆக செல்வதற்கு ட்ராக்ஸன் ப்ரோ மோடை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். டாடா பன்ச் கார் ஓரளவிற்கு ஆஃப் ரோடு திறன்களையும் பெற்றுள்ளது.

இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா பன்ச் காரின் விலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வேரியண்ட் வாரியாக டாடா பன்ச் காரின் விலையை நீங்கள் கீழே காணலாம்.

 • ப்யூர் - 5.49 லட்ச ரூபாய்
 • அட்வென்ஜர் - 6.39 லட்ச ரூபாய்
 • அக்காம்ப்ளிஸ்டு - 7.29 லட்ச ரூபாய்
 • க்ரியேட்டிவ் - 8.49 லட்ச ரூபாய்
 • இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

  இவை அனைத்தும் மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்களின் விலையாகும். நாங்கள் ஏற்கனவே கூறியடி டாடா பன்ச் காரில் ஏஎம்டி வேரியண்ட்களும் கிடைக்கும். ஆனால் ப்யூர் வேரியண்ட்டில் ஏஎம்டி தேர்வு வழங்கப்படாது. எஞ்சிய அட்வென்ஜர், அக்காம்ப்ளிஸ்டு மற்றும் க்ரியேட்டிவ் ஆகிய வேரியண்ட்களில் மட்டுமே ஏஎம்டி தேர்வு வழங்கப்படும்.

  இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

  மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்களை காட்டிலும் ஏஎம்டி மாடல்களின் விலை 60 ஆயிரம் ரூபாய் அதிகம். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே டாடா பன்ச் காரை இந்த விலையில் வாங்க முடியும். அதற்கு பிறகு விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தியால இத விட பாதுகாப்பான கார் கெடையாது... மிக மிக குறைவான விலையில் டாடா பன்ச் அறிமுகம்... உடனே வாங்க தோணுது

  பன்ச் காருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக சவாலான விலை நிர்ணயத்தை செய்துள்ளது. இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் இந்த விலைக்கு கிடைக்கிறது என்பது டாடா பன்ச் காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க கூடிய அம்சமாக இருக்கும். எனவே டாடா பன்ச் கார் விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

Most Read Articles

English summary
Tata punch micro suv launched in india here are all the details
Story first published: Monday, October 18, 2021, 12:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X