Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

டாடா பஞ்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு காட்டியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகமாகி புக்கிங்கில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது டாடா பஞ்ச் (Tata Punch). இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடலாகும். இதில், நாம் எதிர்பார்த்திரா பல்வேறு சிறப்பு வசதிகளை டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது. பரந்தளவு திறக்கும் கதவு, அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் என எக்கசக்க அம்சங்களை பஞ்ச் காரில் டாடா வழங்கியுள்ளது.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

அதேநேரத்தில், சில சிறப்பு வசதிகளை நிறுவனம் வழங்க தவறி விட்டது. அந்த அம்சங்கள் இந்திய வாகன பிரியர்கள் கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. டாடா பஞ்ச் காரில் வழங்க தவறிய அந்த அம்சங்கள் எவை என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

சன்ரூஃப் (Sunroof)

இளைஞர்கள் மற்றும் வாகன ஆர்வலர்களின் மிகவும் பிடித்தமான வசதிகளில் ஒன்றாக சன்ரூஃப் மாறியிருக்கின்றது. இத்தகைய அம்சத்தை டாடா நிறுவனம் பஞ்ச் காரில் வழங்காமல் இருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் வேதனையளிக்கும் விஷயமாக மாறியிருக்கின்றது. அதேநேரத்தில் டாடா மோட்டார்ஸ், அதன் பிற தயாரிப்புகளான நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களில் சன்ரூஃப் வசதியினை வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

எல்இடி ஹெட்லைட் (Led Headlights)

டாடா பஞ்ச் காரில் இடம் பெறாத மற்றுமொரு அம்சமாக எல்இடி மின் விளக்குகள் இருக்கின்றன. டாடா பஞ்ச் காரில் புரஜெக்டர் ரக மின் விளக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது சற்றே அதிக விலைக் கொண்ட பாகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், வழக்கமான ஹாலோஜன் மற்றும் எல்இடி மின் விளக்குகளைக் காட்டிலும் அதிக பயன்களை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

எனவேதான் இந்த மின் விளக்கை டாடா பஞ்ச் காரில் பயன்படுத்தியிருக்கின்றது. அதேநேரத்தில் எல்இடி மின் விளக்கு வழங்கப்படாதது அதன் பிரியர்கள் மத்தியில் லேசான ஏமாற்றத்தை வழங்கியுள்ளது. எல்இடி மின் விளக்குகள் குறைந்த சக்தியிலேயே இயங்கும் திறன் கொண்டவை. ஆகையால், மின்சார சிக்கனம் தாராளமாக நடைபெறும்.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System)

மைக்ரோ காரில் இடம்பெற தவறிய அம்சங்களில் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் அம்சமும் ஒன்று. இது, டயர்களில் இருக்கும் காற்றின் அளவைக் கண்கானிக்க உதவும். காற்றின் அளவு குறையும்போது அதுகுறித்த தகவலை வழங்கி எப்போதும் நிலையான அளவில் காற்றை வைத்துக் கொள்ள உதவும். இந்த அம்சத்தை டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் முக்கிய கார் மாடல்களில் வழங்கி வருகின்றது.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

பின் பக்கத்திற்கான ஏசி துவாரங்கள் (Rear AC Vents)

பின் பக்கத்தில் அமரும் வாடிக்கையாளர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பன்முக வசதிகளை பின்னிருக்கையாளர்களுக்கு வழங்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், சார்ஜிங் மற்றும் ஏசி துவாரங்கள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், டாடா பஞ்ச் காரில் பின்னிருக்கையாளர்களுக்கான ஏசி துவாரம் வழங்கப்படவில்லை.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

இது நிச்சயம் டாடா கார் பிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதுமாதிரியான அம்சங்களைத் தவிர்த்து வருகின்றன. அந்தவகையிலேயே, டாடா நிறுவனமும் அதன் பஞ்ச் காரை மலிவு விலையில் வழங்கும் பொருட்டு இந்த வசதியை தவிர்த்திருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

முன் பக்க இருக்கையாளர்களுக்கான மையப்பகுதி கை ஓய்வளிப்பான் (Front Center Armrest)

இருக்கையாளர்களுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் சிறிய அம்சமாக இது இருக்கின்றது. இது பஞ்ச் காரில் இடம் பெறாதது உண்மையில் பலருக்கு ஏமாற்றமே. கைகளுக்கு வலி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்த அம்சத்தை வழங்கி வருகின்றன. ஆனால், பஞ்ச் காரில் இது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் பின்னிருக்கையாளர்களுக்கு கோப்பையைத் தாங்கும் வசதியுடன் ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டிருக்கின்றது.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

ஆம்பிசியன்ட் மின் விளக்கு (Ambient lighting)

டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் பிரீமியம் தர கார் மாடலில் ஆம்பிசியன்ட் மின் விளக்கு வசதியை வழங்குகின்றது. ஆனால், இந்த வசதியை பஞ்ச் காரில் வழங்க தவறிவிட்டது. இந்த அம்சம் பஞ்ச் கார் மாடலின் எந்த தேர்விலும் ஆப்ஷனலாகக் கூட வழங்கப்படவில்லை.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

எஞ்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பம் (Engine Start-Stop Tech)

இளைஞர்களைக் கவரும் பொருட்டு டாடா நிறுவனம் பன்முக வசதிகளை பஞ்ச் காரில் வழங்கியிருக்கின்றது. அதிக திறனை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் பிரீமியம் தரத்தை வழங்கும் வகையில் உட்புற தோற்றம் உள்ளிட்டவற்றை நிறுவனம் வழங்கியிருக்கின்றது. ஆனால், ஸ்டார்ட்-ஸ்டாப் வசதியை அது வழங்கவில்லை. வாகனத்தின் எரிபொருள் சிக்கனத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இது வழங்கப்பட்டிருக்கலாம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Tata Punch காரில் இடம் பெற தவறிய முக்கிய அம்சங்கள்... அட இவ்ளோ இருக்கா? பட்டியல் ரொம்ப பெருசா இருக்கே!

டாடா பஞ்ச் காரில் மேற்கூறிய அம்சங்கள் இடம் பெறாதது சற்றே வேதனையளிக்கும் வகையில் இருந்தாலும், இதனைப் போக்கும் பொருட்டு பன்முக சிறப்பு வசதிகளை பஞ்ச் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்பது பல மடங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. அதே நேரேத்தில் இதன் விலையும் மிக குறைவாகும். ரூ. 5.49 லட்சம் என்ற ஆரம்ப விலையிலேயே பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Tata punch micro suv misses some important features
Story first published: Tuesday, November 16, 2021, 19:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X