எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

டாடா பஞ்ச் காரின் மைலேஜ் விபரத்தை அக்காருக்கு விலையில் போட்டியாக இருக்கும் பிற கார் மாடல்களின் மைலேஜ் விபரத்துடன் ஒப்பிட்டு, அதுகுறித்த தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

வெகு நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரை இந்தியாவில் நேற்றைய (அக்டோபர் 18) தினம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் வருகை எப்போது அமையுமோ என எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த பட்ஜெட் வாகன பிரியர்களுக்கு இந்நிகழ்வு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

ரூ. 5.49 லட்சம் என்ற பட்ஜெட் விலையில் டாடா பஞ்ச் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த விலை அதன் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதோபோல் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களும் கூடுதல் டஃபான போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

இதேபோல், மைலேஜ் விஷயத்திலும் டாடா பஞ்ச் அதன் போட்டியாளர்களுக்கு போட்டியை வழங்கும் வகையில் இருக்கின்றதா என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், ரெனால்ட் கைகர் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய கார்களுடன் ஒப்பிட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து கார் மாடல்களுக்கும் ரூ. 6 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி 1.2 லிட்டர், 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு ரெவோட்ரோன் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 84 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

இதில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதிக் கொண்ட பஞ்ச் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.97 கி.மீட்டரையும்., ஏஎம்டி வசதிக் கொண்ட பஞ்ச் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.82 கி.மீட்டரையும் மைலேஜாக வழங்கும். இந்த மைலேஜ் திறன் விலையில் போட்டியை வழங்கும் வகையில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், ரெனால்ட் கைகர் டர்போ மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய கார்களைக் காட்டிலும் சற்று குறைவாக இருக்கின்றது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

குறிப்பாக, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அனைத்து கார் மாடல்களைக் காட்டிலும் அதிக மைலேஜே தரும் காராக காட்சியளிக்கின்றது. 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேட்சுரல்லி அய்பயர்டு பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட ஸ்விஃப்ட் அதிகபட்சமாக 23.20 கிமீ மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது மேனுவல் வசதிக் கொண்ட வேரியண்டின் மைலேஜ் விபரம் ஆகும்.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

இதன் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு இதைக் காட்டிலும் சற்று கூடுதல் மைலேஜை வழங்குகின்றது. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.76 கிமீ மைலேஜை அது வழங்குகின்றது. இதற்கு அடுத்தபடியான இடத்தை பிடித்திருக்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 20.7 கிமீ மைலேஜை வழங்குகின்றது. இது மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட ஐ10 நியோஸின் மைலேஜ் திறன் ஆகும். இதன் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வு அதிகபட்சமாக 20.5 கிமீ மைலேஜை வழங்குகின்றது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

இதேபோல் பிற போட்டியாளர்களான ரெனால்ட் கைகர் டர்போ அதிகபட்சமாக 20.5 கிமீ மைலேஜையும், ரெனால்ட் ட்ரைபர் 19 கிமீ மைலேஜையும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வழங்குகின்றன. இவையனைத்துடன் ஒப்பிடுகையில் டாடா பஞ்ச் குறைவான மைலேஜை வழங்குவதை நம்மால் உணர முடிகின்றது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

மைலேஜ் விபரம் பட்டியலாக:

Tata Punch Maruti Swift Renault Kiger Hyundai Grand i10 NIOS Renault Triber
Engine 1.2 L, 3-cyl, Petrol 1.2 L, 4-cyl, Petrol 1.0 L, 3-cyl, Turbo Petrol 1.2 L, 4-cyl, Petrol 1.0 L, 3-cyl, Petrol
Power 84 BHP / 113 Nm 89 BHP / 113 Nm 99 BHP / 160 Nm 82 BHP / 114 Nm 71 BHP / 96 Nm
Transmission 5-Speed MT

5-Speed AMT

5-Speed MT

5-Speed AMT

5-Speed MT/CVT 5-Speed MT

5-Speed AMT

5-Speed MT/AMT
ARAI Mileage (MT) 18.97 kmpl 23.20 kmpl 20.5 kmpl 20.7 kmpl 19 kmpl
ARAI Mileage (AT) 18.82 kmpl 23.76 kmpl 18.24 kmpl 20.5 kmpl 18.29 kmpl
எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

இது டாடா பஞ்ச் விரும்பிகளுக்கு லேசான ஏமாற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது. அதேவேலையில், டாடா மோட்டார்ஸ் இந்த காரில் எக்கசக்க சிறப்பு வசதிகளை வாரி வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, இது ஓர் அதிக உறுதியான கார் என்பது கவனித்தக்கது. ஆம், டாடா பஞ்ச் ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற வாகனம்.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தி மோதல் ஆய்வில் இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரத்தையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கையும் பெற்றது. இதனால், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான கார் மாடல்களில் மிகவும் முக்கியமான காராக பஞ்ச் மாறியிருக்கின்றது.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

இதுமட்டுமின்றி இன்னும் பல அம்சங்கள் டாடா பஞ்சில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மிக அகலமாக திறக்கும் கதவுகள் (90 டிகிரி திறப்பு வசதிக் கொண்டது), அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் என பன்முக சிறப்பு வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

இத்துடன், அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் இரட்டை ஏர்பேக், ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர்கள், இஎஸ்சி எனப்படும் ஸ்டாண்டர்டு எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பக்கவாட்டு தலை பகுதிக்கான பாதுகாப்பு அம்சம், அனைத்து இருக்கைகளிலும் மும்முனை பெல்ட், கார்னரிங் வசதிக் கொண்ட முன் பக்க பனி மின் விளக்கு, பெரிமெட்ரிக் அலாரம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட பல வழங்கப்பட்டுள்ளன.

எது அதிகம் மைலேஜ் தருகிறது?.. டாடா பஞ்சா அல்லது அதன் போட்டி கார் மாடல்களா? இதோ முழு மைலேஜ் விபரம்!

மேலும், முதன் முதலாக பிரேக் ஸ்வே கன்ட்ரோல் எனப்படும் புதிய பாதுகாப்பு வசதியும் டாடா பஞ்சில் வழங்கப்பட்டிருக்கின்றது. டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவிக்கு தற்போது ரூ. 21 ஆயிரம் என்ற முன்தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. விற்பனையாளர்கள் மற்றும் ஆன்-லைன் வாயிலாக புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
Tata punch micro suv vs rivals fuel efficiency compared
Story first published: Tuesday, October 19, 2021, 11:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X