ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

டாடா பஞ்ச் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய மைக்ரோ-எஸ்யூவி மாடலாக பஞ்ச் என்ற பெயரிலான கார் ஒன்றை அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த மைக்ரோ-எஸ்யூவி மாடல் எச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

அதனை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுவரும் டாடாவின் இந்த மைக்ரோ-எஸ்யூவிக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், தற்போது டாடா பஞ்ச் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Image Courtesy: Shivam Gamerz

ஷிவம் காமெர்ஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவில் ஆரஞ்ச் நிறத்தில் காட்சித்தரும் டாடா பஞ்ச் காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்தை மிக நெருக்கமாக காணலாம். டாடா பஞ்ச் காரின் வெளிப்பக்கம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்டது.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் முன்பக்கம் டாடா ஹெரியரை போன்று பிளவுப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப் செட்-அப்பை பெற்றுள்ளது. இந்த படங்களில் பஞ்ச் காரின் பக்கவாட்டில் 16-இன்ச், இரட்டை-நிற அலாய் சக்கரங்களை பார்க்கலாம். பின்பக்க கதவு கைப்பிடிகள் காரின் C-பில்லர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

இந்த மைக்ரோ-எஸ்யூவி டாடா வாகனம் பின்பக்கத்தில் Y-வடிவில் டெயில்லைட்களை கொண்டுள்ளது. இவற்றுடன் காரை சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் மேற்க்கூரை தண்டவாளங்களுக்கு மிகவும் எடுப்பாக உள்ளது என்பதை கூறியே ஆக வேண்டும்.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

வெளிப்பக்கத்திற்கு ஏற்ப டாடா பஞ்ச் காரின் உட்புறமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டேஸ்போர்டு மிகவும் நேர்த்தியாக, குழப்பம் இல்லாத டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டேஸ்போர்டில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் எந்தவொரு சப்போர்டும் இல்லாமல் நிற்க, ஏசி துளைகள் செவ்வக வடிவில் வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

இவற்றுடன் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், 7-இன்ச் திரை & அனலாக் வேகமானி உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை இதன் கேபினில் வழங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், மடக்கும் வசதியுடன் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், பவர் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் iRA இணைப்பு கார் தொழிற்நுட்பம் போன்றவற்றையும் இதன் கேபினில் எதிர்பார்க்கிறோம்.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

டாடா கார்கள் பொதுவாகவே மிகவும் பாதுகாப்பானவை என்கிற கருத்து பரவலாக உள்ளதால், இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் குழந்தைக்கான இருக்கை ஹேங்கர் உள்ளிட்டவை டாடா பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரில் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

இதனால் மற்ற டாடா கார்களை போன்று பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியும் உலகளாவிய NCAP சோதனையில் அதிக மதிப்பெண்களை வாங்கும் என்பது உறுதி. டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் கார்கள் இந்த மோதல் சோதனையில் முழு ஐந்து மதிப்பெண்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

டாடாவின் இந்த புதிய மைக்ரோ-எஸ்யூவி காரில் 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட உள்ளன.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

அதேநேரம் 1.2 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 சிலிண்டர் என்ஜின் தேர்வும் வழங்கப்பட உள்ளதாம். மேலும் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி காரை எலக்ட்ரிக் வெர்சனிலும் கொண்டுவரும் எண்ணத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஷோரூமிற்கு வந்தது டாடாவின் புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் - டாடா பஞ்ச்!! அறிமுகம் விரைவில்

எங்களுக்கு தெரிந்தவரையில், டாடா பஞ்ச் மாடலின் ஆரம்ப விலை ரூ.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம். அறிமுகத்திற்கு பிறகு இந்த டாடா காருக்கு மாருதி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்டவை விற்பனையில் போட்டியளிக்க தயாராக உள்ளன. அதேநேரம் மாருதி வேகன்-ஆர், ஹூண்டாய் ஐ10 நியோஸ் போன்றவையும் விலையில் போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
Tata Punch Seen Undisguised At Dealership Ahead Of Launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X