2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

2021 டாடா சஃபாரி எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் டிவிசி வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த 2021ஆம் ஆண்டை புதிய அறிமுகங்களுடன் துவங்க ஆயத்தமாகி வருகிறது. இதில் முதல் மாடலாக அல்ட்ராஸின் புதிய ஐடர்போ வேரியண்ட் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகமானது.

2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

இதனை தொடர்ந்து 2021 டாடா சஃபாரி வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ளது. தற்போதைய ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாக வெளிவரும் இந்த எஸ்யூவி வாகனத்தின் தயாரிப்பு பணிகள் புனேவில் உள்ள டாடாவின் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில படங்கள் டாடாவின் தொழிற்சாலையில் இருந்து கடந்த வாரத்தில் வெளியாகி இருந்தன. அவற்றை தொடர்ந்து தற்போது மீண்டும் 2021 சஃபாரி தொடர்பான வீடியோ டாடாவின் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் என்ற 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ள புதிய சஃபாரி 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கிராவிட்டாஸ் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

7-இருக்கை மட்டுமின்றி 6-இருக்கை தேர்விலும் கிடைக்கவுள்ள 2021 சஃபாரியில் கேப்டன் இருக்கை மத்திய இருக்கை வரிசையில் வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் கிராவிட்டாஸில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்படவில்லை, ஆனால் சமீபத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருந்த புதிய சஃபாரியில் பனோராமிக் சன்ரூஃபை பார்க்க முடிந்தது.

2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

ஆனால் இந்த அம்சம் சஃபாரியின் டாப் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 சஃபாரி எஸ்யூவி கார் ராயல் நீலம், அர்கஸ் வெள்ளை மற்றும் டேடோனா க்ரே என்ற நிறத்தேர்வுகளில் வாங்கக்கூடியதாக வழங்கப்படவுள்ளது.

2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

மூன்றாவது இருக்கை வரிசை மட்டுமின்றி எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், பின்புறத்தில் டிஸ்க் ப்ரேக்குகளையும் சஃபாரி பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஹெரியரில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் 4-சிலிண்டர் க்றையோடெக் டீசல் என்ஜினைதான் இந்த 2021 மாடலிலும் டாடா வழங்கியுள்ளது.

2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை!! மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டீசல் என்ஜின் உடன் சஃபாரியில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. சஃபாரி முன்பக்க-ட்ரைவ் உள்ளமைவில் மட்டும்தான் கிடைக்கவுள்ளது, 4-சக்கர-ட்ரைவ் வெர்சன் விற்பனையை பொறுத்து பிறகு அறிமுகமாகலாம்.

Most Read Articles

English summary
2021 Tata Safari SUV Production Begins, Pics & TVC Released
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X