10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

புனே தொழிற்சாலையில், சஃபாரியின் தயாரிப்பில் வெற்றிக்கரமாக 10,000-ஐ கடந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

மிக பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில், விற்பனையில் இருக்கும் ஹெரியர் எஸ்யூவி மாடலின் மூன்று-இருக்கை வரிசை வெர்சனாக சஃபாரியை நடப்பு 2021ஆம் வருடத்தின் துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

இதேபோன்று ஹெக்டரின் 3-இருக்கை வரிசை மாடலாக ஹெக்டர் ப்ளஸ் காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் அந்த சமயத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. அதன்பின் ஹூண்டாய் நிறுவனம் அல்கஸாரை அறிமுகப்படுத்த, தற்சமயம் இந்த மூன்று நீளமான எஸ்யூவி வாகனங்களுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸுக்கு புனேவிலும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து 100வது சஃபாரி காரை கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையில் இருந்து வெளியிட்டு இருந்தது.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

ஆனால் அதன்பின் மீதி 9,900 சஃபாரி கார்களை வெறும் நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. சஃபாரியின் தயாரிப்பில் 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்திருப்பதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வணிக தலைவர் ஷைலேஷ் சந்த்ரா கலந்து கொண்டார்.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

அப்போது பேசிய அவர், நான்கு மாதங்களில் புத்தம் புதிய சஃபாரியின் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நம் நாட்டில் நிலவிவரும் தற்போதைய கடினமான சூழலில் இந்த மைல்கல்லை நாங்கள் அடைந்துள்ளோம்.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

10000வது யூனிட் வெளிவந்திருப்பது, இந்த புகழ்பெற்ற மாதிரியின் மறுப்பிறப்பிற்கு காரணமான பல்வேறு அணிகள் மேற்கொண்ட கூட்டு கடின உழைப்பை வெளிக்காட்டுகிறது என்றார். புதிய சஃபாரி 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

தற்சமயம் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடலாக விளங்கும் சஃபாரி, சந்தையில் 25.2 சதவீத பங்கை கொண்டுள்ளது. ஹெரியருடன் சேர்த்து மொத்தம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் 41.2% பங்கை டாடா சஃபாரி கொண்டுள்ளது.

10 ஆயிரமாவது சஃபாரி காரை வெளியிட்டது டாடா!! புனே தொழிற்சாலையில் கொண்டாட்டம்!

டாடா சஃபாரிக்கு விற்பனையில் முக்கிய போட்டியாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் விளங்குகிறது. டாடா மோட்டார்ஸின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் உருவாக்கப்படும் சஃபாரி, ஒமேகார்க்-இன் திறனை கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
Tata Motors announces Safari's 10,000 units production milestone in India. The company has achieved this new production milestone from its manufacturing facility in Pune within just 5 months from its launch this year.
Story first published: Tuesday, July 27, 2021, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X