Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

Tata Motors நிறுவனம் அதன் Safari கார் மாடலில் புதிதாக Gold Edition எனும் புதிய பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இக்காரின் சிறப்பு வசதிகள் என்ன மற்றும் இதன் விலை என்ன என்ற முக்கிய தகவல்களைக் கீழே காணலாம்.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் சஃபாரி கார் மாடலில் கோல்டு எடிசன் (Safari Gold Edition) எனும் புதிய சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சஃபாரி அட்வென்சர் ட்ரிம்மைக் காட்டிலும் மிக அதிக விலைக் கொண்ட தேர்வாக சஃபாரி கோல்ட் எடிசன் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

தற்போது டாடா சஃபாரி கார் ராயல் ப்ளூ, டிராபிக்கல் மிஸ்ட் (புதியது), டேடோனா கிரே, ஓர்கஸ் வெள்ளை மற்றும் ட்ராபிகல் மிஸ்ட் ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவற்றுடன் புதிதாக கோல்ட் எடிசன் சஃபாரி சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது வெள்ளை மற்றும் கருப்பு நிற தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். அறிமுக விலையாக இந்த சிறப்பு பதிப்பிற்கு ரூ. 21.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

இது மேனுவல் வேரியண்டிற்கான விலை ஆகும். தானியங்கி தேர்விலும் கோல்ட் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். அதற்கு ரூ. 23.18 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அட்வென்சர் ட்ரிம்களைக் காட்டிலும் ரூ. 1.3 லட்சம் வரை அதிக விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆகையால், சஃபாரியின் உயர்நிலை வேரியண்டுகளாக இது காட்சியளிக்கின்றது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி கோல்டு எடிசன் காரை அரபு நாட்டில் நடை பெற இருக்கும் 2021 ஐபிஎல் போட்டியின்போது காட்சியளிக்க திட்டமிட்டிருக்கின்றது. கடந்த போட்டியின்போது விளையாட்டு மைதானத்தில் அல்ட்ராஸ் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார் காட்சியளித்தது. இந்த முறை அல்ட்ராஸ் கார் மாடலுக்கு பதிலாக சஃபாரியே காட்சியளிக்க இருக்கின்றது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அனைத்து தின போட்டியின்போது விளையாட்டு மைதானத்தில் சஃபாரி கோல்டு எடிசன் காட்சியளிக்கும். டாடா நிறுவனம் இந்த கோல்டு எடிசன் சஃபாரியை வழக்கமான சஃபாரியைக் காட்டிலும் சற்று மாறுபட்ட தோற்றத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

குறிப்பாக, காரை பிரீமியம் தர நிறங்களால் அலங்கரித்திருக்கின்றது. வெள்ளை-கருப்பு, மோன்ட் பிளாங்க் மார்பிள் ஃபினிஷ், தங்க நிற அக்செண்டுகள் என கவர்ச்சிகரமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உள் மற்றும் வெளிப்புறத்தில் மாறு பட்ட நிறங்கள் பயன்படுத்தியிருப்பதை இது குறிக்கின்றது. மேலும், இது கோல்டு எடிசன் என்பதால் காரின் முன் பக்க க்ரில், ஹெட்லைட், கைப்பிடி உள்ளிட்ட பகுதிகளில் கோல்டு நிறத்திலான அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

இதைத்தொடர்ந்து, இருக்கைகளுக்கும் புதிய நிற லெதர் போர்வைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது கோல்டு எடிசன் சஃபாரிக்கு கூடுதல் பிரீமியம் தோற்றத்தைக் காட்சியளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்துடன், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், Wifi இணைப்பு உடன் கூடிய ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

இத்துடன், இஎஸ்பி வசதி உடன் கூடிய 8.8 இன்சிலான் ஃப்ளோட்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக மிக 14 அம்சங்களை நம்மால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி காரை தனது இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தைக் கொண்டு உருவாக்கி வருகின்றது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

மேலும், இக்காரை OMEGARC ஆர்கிடெக்சர் வாயிலாக கட்டமைத்திருக்கின்றது. லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க பயன்படுத்தும் டி8 பிளாட்பாரத்தை பயன்படுத்தி உருவாக்கியிருக்கின்றது. அணிகலன் மற்றும் நிறத் தேர்வில் மாறுபட்டு காணப்படும் டாடா சஃபாரி கோல்டு எடிசன் எஞ்ஜின் விஷயத்தில் மட்டும் வழக்கமான சஃபாரி உடன் இணக்கமாக காட்சியளிக்கின்றது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் தேர்வில் டாடா சஃபாரி கோல்டு எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். இது அதிகபட்சமாக 170 எச்பி பவரை 3,750 ஆர்பிஎம்மிலும், 350 என்எம் டார்க்கை 2,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது.

Tata Safari Gold Edition இந்தியாவில் அறிமுகம்... கவர்ச்சியான காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்த்த Tata!!

இத்துடன், 6 ஸ்பீடு மேனுபல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகின்றது. டாடா சஃபாரி கார் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், ஹூண்டாய் அல்கஸார் மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு போட்டிாக விற்பனையில் இருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata safari gold edition launched in india at rs 21 89 lakhs
Story first published: Friday, September 17, 2021, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X