எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் முற்றிலும் புதிய சஃபாரி எஸ்யூவி காரின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தலைமுறை சஃபாரி எஸ்யூவி காரை இந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த காரை விளம்பரப்படுத்தும் பணியில் இந்த நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

இந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இந்த எஸ்யூவி வாகனத்தின் முன்பக்கம் டீசர் படம் ஒன்றின் மூலமாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் காரின் ஹெட்லைட்களையும், க்ரில் அமைப்பையும் பார்க்க முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது காரின் டெயில்லைட்களை வெளிக்காட்டும் டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

டெயில்லைட்கள் மட்டுமின்றி காரின் D-பில்லரையும் இந்த டீசர் படத்தில் பார்க்க முடிகிறது. எல்இடி தரத்தில் உள்ள டெயில்லைட்கள் ஆட்டோ எக்ஸ்போவில் கிராவிட்டாஸில் பார்த்ததை போன்று உள்ளது. டெயில்லேம்ப்கள் லைன் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம்.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

அதேபோல் பின்பக்க கதவிற்கு குறுக்கே இந்த லைன் கருப்பு பியானோ நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கலாம். டாடா நிறுவனம் சமீபத்தில்தான் சஃபாரி பெயர் பலகையை திரும்ப பெற்றிருந்தது. ஹெரியரின் 7-இருக்கை வெர்சனுக்கு இந்த பெயர் வழங்கப்படவுள்ளது.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

ஆனால் முன்னதாக இந்த 7-இருக்கை டாடா கார் கிராவிட்டாஸ் என்ற பெயரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் தயாரிப்பு பணிகளில் உள்ள சஃபாரியின் தோற்றம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட்டும், அறிமுகம் அடுத்த பிப்ரவரி மாதத்திலும் இருக்கலாம்.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

சாலை சோதனை ஓட்டங்களின்போது சில முறை அடையாளப்படுத்தப்பட்டிருந்த சஃபாரி ஹெரியர் எஸ்யூவி மாடலை போன்று நீண்ட தொழிற்நுட்ப அம்சங்களை பெற்றுவரவுள்ளது. இதில் 8.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7-இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ஜேபிஎல் ஸ்பீக்கர்ஸ், பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை அடங்கலாம்.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

பழுப்பு நிறத்தில் சஃபாரியின் அடையாள வடிவத்திலான டேஸ்போர்டு உடன் சஃபாரியின் கேபினில் 6 காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், மலைப்பாதைகளுக்கான கண்ட்ரோல், குழந்தை இருக்கைகான ஐசோஃபிக்ஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

எப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி!! டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஃபியட்டின் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் புதிய சஃபாரியில் வழங்கப்படவுள்ளது. அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் இணைக்கப்படவுள்ளது.

Most Read Articles
English summary
Tata shares another teaser of the all-new Safari SUV, this time the tail lights
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X