சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

எந்தவொரு மறைப்பும் இல்லாமல் டாடா டியாகோ சிஎன்ஜி கார் இந்திய சாலையில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்த ஸ்பை வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் சிஎன்ஜி தொகுப்புகளுடன் சில டாடா கார்கள் அடுத்த 2022ஆம் நிதியாண்டில் இருந்து வெளிவரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார்.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

ஏனெனில் டாடா மோட்டார்ஸின் போட்டி நிறுவனங்களான மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் உள்ளிட்டவை அதன் தயாரிப்புகளில் சிலவற்றிற்கு சிஎன்ஜி தேர்வுகளில் வழங்கி அதில் வெற்றியும் பெற்று வருகின்றன.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

இந்திய வாடிக்கையாளர்களிலும் பலர் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யவே விரும்புகின்றனர். டாடா கார்களில் எந்தெந்த கார்கள் சிஎன்ஜி தொகுப்புகளை பெறவுள்ளன என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

டியாகோ, டிகோர் போன்ற மலிவான டாடா கார்கள் சிஎன்ஜி தேர்வுகளை பெறலாம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் தற்போது சிஎன்ஜி தொகுப்பு பொருத்தப்பட்ட டாடா டியாகோ கார் ஒன்று சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஸ்பை வீடியோவினை தான் மேலே பார்க்கிறீர்கள். டியாகோ சிஎன்ஜி காரில் 12 கிலோ அல்லது 60 லிட்டர்கள் கொள்ளவு கொண்ட சிஎன்ஜி டேங்க் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

இதன் காரணமாக காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியின் அளவு கணிசமாக குறையும். ஏனெனில் அந்த பகுதியை சிஎன்ஜி டேங்க் ஆக்கிரமித்துவிடும். சிஎன்ஜி கார்கள் பொதுவாகவே டாக்ஸி போன்ற கமர்ஷியல் பயன்பாட்டிற்காக தான் அதிகளவில் வாங்கப்படுகின்றன.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

ஏனெனில் சிஎன்ஜி வாகனங்கள் அதிக மைலேஜை தரக்கூடியவை. டியாகோ சிஎன்ஜி காரின் மைலேஜை 30- 35 கிமீ அளவில் எதிர்பார்க்கிறோம். டாடா மோட்டார்ஸ் உள்பட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் சிஎன்ஜி பக்கம் வருவதற்கு காரணங்களுள் ஒன்று, பெட்ரோல், டீசலின் விலைகளாகும்.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

ஏனெனில் இந்த வருட துவக்கத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எதிரேபார்க்காத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக டியாகோ மட்டுமின்றி டாடாவின் காம்பெக்ட் செடான் காரான டிகோரும் சிஎன்ஜி தேர்வை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

டாடாவின் இந்த சிஎன்ஜி மாடல்களில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இந்த என்ஜின் பெட்ரோலில் இயங்கும்போது அதிகப்பட்சமாக 86 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

சிஎன்ஜி கார்களை களமிறக்க தயாராகும் டாடா மோட்டார்ஸ்!! சோதனையில் டியாகோ சிஎன்ஜி...

அதுவே சிஎன்ஜி-இல் இயங்கும் போது என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் சற்று குறையும். இதுவே மைலேஜ் அதிகமாக கிடைப்பதற்கு வழிவகை செய்கிறது. அதேநேரம் இந்த சிஎன்ஜி கார்களின் விலைகள் வழக்கமான விலைகளை காட்டிலும் ரூ.50,000 அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Tata Tiago CNG Seen Sans Camo Ahead Of Imminent Launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X