பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

டாடா டியாகோ சிஎன்ஜி காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

டியாகோ சிஎன்ஜி காருக்கு, டாடா டீலர்ஷிப்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை ஏற்க தொடங்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஜிக் வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

டாடா டியாகோ சிஎன்ஜி மாடல் இந்திய சந்தையில் வரும் நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த புதிய மாடலின் டெலிவரி பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவது ஏற்கனவே நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த இரண்டு கார்களும் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றன.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

சிஎன்ஜி பம்ப்பில் வரிசையில் காத்திருக்கும்போது கூட ஸ்பை படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. டாடா டியாகோ சிஎன்ஜி கார், அதே 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

ஆனால் சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்கும்போது பவர் மற்றும் டார்க் அவுட்புட் குறையலாம். அதே நேரத்தில் சிஎன்ஜி வேரியண்ட் மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. XT மற்றும் XZ வேரியண்ட்கள் அடிப்படையில் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

இதில் XT வேரியண்ட்டில், வீல் கவர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவுடன் ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹார்மன் நிறுவனத்தின் 4 ஸ்பீக்கர், இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் XZ வேரியண்ட்டிலும் ஏராளமான வசதிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். மேலும் கூல்டு க்ளவ் பாக்ஸ், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, பின் பகுதியில் டீஃபாகர் உள்ளிட்ட வசதிகளையும் இந்த வேரியண்ட் பெற்றுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

எனினும் வழக்கமான டியாகோ காருடன் ஒப்பிடுகையில், சிஎன்ஜி வேரியண்ட்டின் டிசைனில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் சிஎன்ஜி பேட்ஜ்கள் இடம்பெறலாம். அதே நேரத்தில் வழக்கமான மாடலுடன் ஒப்பிடுகையில், சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை 60 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம் என தெரிகிறது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பன்ச் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ள டாடா பன்ச் காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

வரும் காலங்களில் பன்ச் காரின் சிஎன்ஜி வேரியண்ட்டையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறது.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வு... Tata Tiago CNG காருக்கான முன்பதிவுகள் தொடக்கம்?

டாடா டிகோர் மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Tata tiago cng unofficial bookings opened in india check details here
Story first published: Thursday, October 21, 2021, 23:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X