டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் டியாகோ என்.ஆர்.ஜி காரை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

டாடா டியாகோ க்ராஸ்ஓவரின் என்.ஆர்.ஜி வேரியண்ட்டின் விற்பனை 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. அப்போது இந்த டாடா காரை வாங்க முடியவில்லையே என்ற கவலை இருந்திருக்கலாம்.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

ஆனால் அது இனி வேண்டாம். ஏனெனில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் டியாகோ என்.ஆர்.ஜி காரை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

இம்முறை டியாகோ ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்து கொண்டுவரப்படும் இந்த என்.ஆர்.ஜி மாடல் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி அறுமுகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், முந்தைய டியாகோ என்.ஆர்.ஜி காரை போல், பக்கவாட்டில் பிளாஸ்டிக் பேனல்களை எதிர்பார்க்கலாம்.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

ஏனெனில் இவையே ஸ்டாண்டர்ட் டியாகோ ஹேட்ச்பேக் காரில் இருந்து என்.ஆர்.ஜி மாடலை வேறுப்படுத்தி காட்டுகிறது. இவற்றுடன் காரின் பின்பக்கத்திலும் கருப்பு பிளாஸ்டிக் பாகங்கள் வழங்கப்படலாம். ஃபேஸ்லிஃப்ட் காரில் இருந்து கொண்டுவரப்படுவதால் சக்கரங்களின் டிசைனும் மாற்றப்படும்.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

அதுமட்டுமின்றி காரின் அடித்தளமும் எப்படியிருந்தாலும் சற்று உயரமாகவே இந்த ஸ்பெஷல் வேரியண்ட்டில் வழங்கப்படும். இவற்றினால் இந்த ஹேட்ச்பேக் கார் எஸ்யூவி போன்றதான தோற்றத்திலும் காட்சியளிக்கலாம். உட்புறத்தில் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்காது.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

ஆரஞ்ச் நிற தொடுதல்கள் ஏசி துளைகள் மற்றும் கியர் லிவர் என கேபினை சுற்றிலும் வழங்கப்படலாம். அதேபோல் மூன்று-அம்பு டிசைனில் தையல்கள் இருக்கைகளில் கொடுக்கப்படலாம். இவ்வாறு பார்ப்பதற்கு மட்டுமே கேபின் ஸ்டாண்டர்ட் டியாகோவில் இருந்து வேறுப்படலாம். ஆனால் தொழிற்நுட்ப அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

இதனால் டியாகோ என்.ஆர்.ஜி காரிலும் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், ஹர்மன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ரிமோட் லாக்/அன்லாக் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் மற்றும் கேமிரா உடன் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படும். அதேபோல் என்ஜின் தேர்வுகளிலும் எந்த வித்தியாசமும் இருக்காது.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

டியாகோ என்.ஆர்.ஜி ஃபேஸ்லிஃப்ட் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டாடா டியாகோ என்.ஆர்.ஜி கார் மீண்டும் வருகிறதா? ஆக.4ல் அறிமுகமாக உள்ளதாக தகவல்

சில அப்டேட்கள் கொண்டுவரப்படுவதால் புதிய என்.ஆர்.ஜி மாடலின் விலை வழக்கமான டியாகோவை காட்டிலும் ரூ.28,000 வரையில் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் மாருதி சுஸுகி செலிரியோ எக்ஸ் காருக்கு போட்டியாக டியாகோ என்.ஆர்.ஜி கொண்டுவரப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Tiago NRG To Come Back On August 04. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X