ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

டாடா டியாகோ என்ஆர்ஜி ஃபேஸ்லிஃப்ட் கார் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி டியாகோ என்ஆர்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரை சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது டீலர்ஷிப் ஒன்றின் வளாகத்தில் புதிய டியாகோ மாடல் காட்சி தந்துள்ளது.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

டீம் பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இது தொடர்பான படங்களில் காரின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க தோற்றத்தை அருகாமையில் காண முடிகிறது. காரின் வெளிப்புறத்தில் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

இதன்படி கருப்பு நிற பிளாஸ்டிக் பேனல்களை காரின் பின்பக்கத்தில் கூட பார்க்க முடிகிறது. இவற்றிற்கு ஏற்ப மேற்கூரை, கதவு கைப்பிடிகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

காரின் வெளிப்பக்க வெள்ளை நிற பெயிண்ட்டிற்கு இது மிகவும் எடுப்பாக உள்ளது. வெள்ளை நிறம் மட்டுமின்றி பச்சை நிறத்திலும் டியாகோ என்ஆர்ஜி கார் வழங்கப்பட உள்ளது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட டீசர் படத்தின் மூலமாக தெரிய வந்திருந்தது.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

டியாகோவின் இந்த புதிய வேரியண்ட்டின் உட்புற கேபினில், ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 7-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை இந்த காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் அடிப்படையில் 2021 டியாகோ என்ஆர்ஜி மாடல் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் வழங்கப்பட்டுள்ள கூர்மையான ஹெட்லேம்ப்கள் & முன்பக்க க்ரில், ரீடிசைனில் பம்பர் உள்ளிட்டவற்றுடன் இதன் முன்பக்கமும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் என்ஆர்ஜி வேரியண்ட்டில் க்ரவுண்ட் க்ளியரென்ஸை சற்று அதிகமாக டாடா நிறுவனம் வழங்குவது வழக்கம். இந்த ஃபார்முலா இந்த 2021 என்ஆர்ஜி ஃபேஸ்லிஃப்ட் காரிலும் தொடரப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை டியாகோ என்ஆர்ஜி மாடல் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டது.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

ஆனால் இதில் டர்போ-டீசல் என்ஜினின் பயன்பாடு புதிய மாசு உமிழ்வு விதியினால் கடந்த ஆண்டு நிறுத்தி கொள்ளப்பட்டதால், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே புதிய டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இவை ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கக்கூடியவை.

ஷோரூமிற்கு வந்தது 2021 டாடா டியாகோ என்ஆர்ஜி கார்!! ஆகஸ்ட் 4ல் அறிமுகம்

முந்தைய பிஎஸ்4 வெர்சனை போன்று இந்த புதிய பிஎஸ்6 வெர்சனும் ஒற்றை ட்ரிம் நிலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. வழக்கமான டியாகோவின் டாப் வேரியண்ட்டிற்கும் அடுத்ததாக என்ஆர்ஜி மாடல் நிலைநிறுத்தப்பட உள்ளதால் இதன் விலையினை தற்போதைய டியாகோவின் விலைகளுக்கு அதிகமாகவே எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
Tata Tiago NRG Facelift Spotted At Dealership, Launch On August 4.
Story first published: Friday, July 30, 2021, 23:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X