ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

டாடா டியாகோ என்ஆர்ஜி கார் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டாடா டியாகோ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முதலாக டியாகோ என்ஆர்ஜி காரை ஸ்போர்டியான காஸ்மெட்டிக் ஹைலைட்களுடன் 2018ல் அறிமுகப்படுத்தியது. இந்த டியாகோ என்ஆர்ஜி காரில் வழங்கப்பட்ட ஃபாக்ஸ் பாடி க்ளாடிங் & பளிச்சிடும் நிறம் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கியது.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

அதன்பின் இந்த டியாகோ என்ஆர்ஜி மாடலின் விற்பனை கடந்த 2020ஆம் ஆண்டில் நிறுத்தி கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் பார்ப்பதற்கே முரட்டுத்தனமான தோற்றத்தில் காட்சியளிக்கும் டியாகோ என்ஆர்ஜி காரை விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

தோற்றத்தில் புதிய டியாகோ என்ஆர்ஜி கார் டிசைன் ஹைலைட்களை வழக்கமான மாடலில் இருந்து பெறவுள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்டேட் செய்யப்பட்ட டியாகோவில் இருந்து புதிய என்ஆர்ஜி மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

இதனால் ஃபாக்ஸ் க்ளாடிங் உடன் ரீடிசைனில் பம்பர்கள், என்ஆர்ஜி முத்திரை, ஃபாக்ஸ் சறுக்கு தட்டு உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் புதிய டியாகோ என்ஆர்ஜி காரில் எதிர்பார்க்கலாம். இவற்றுடன் அலாய் சக்கரங்களையும் புதிய தொகுப்பாக எதிர்பார்க்கிறோம்.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

மற்றப்படி இந்த புதிய டாடா காரின் உட்புறத்தில் வழங்கப்பட உள்ள அம்சங்கள் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. இருப்பினும் டேஸ்போர்டில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை வழங்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

இதனுடன் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன்பக்க இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்கிறோம்.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தான் என்ஆர்ஜி மாடலிலும் வழங்கப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 84 பிஎச்பி மற்றும் 3,300 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஆகஸ்ட் 4ல் அறிமுகமாகும் டாடா டியாகோ என்ஆர்ஜி!! புதியதாக பல அப்கிரேட்களுடன்

இந்த பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் & ஏஎம்டி என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கொடுக்கப்படவுள்ளன. டியாகோ என்ஆர்ஜி பிஎஸ்6 காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.7.50 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
Tata Tiago NRG to be launched in Indian market on Augest 4.
Story first published: Wednesday, July 28, 2021, 12:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X