மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

டாடா மோட்டார்ஸின் டியாகோ, டிகோர் சிஎன்ஜி கார்கள் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

இந்திய சந்தைக்கான டியாகோ மற்றும் டிகோர் கார்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிஎன்ஜி வேரியண்ட்களை கொண்டுவரவுள்ளது, இது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம் தான்.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

ஏனெனில் இந்த சிஎன்ஜி கார்களின் ஸ்பை படங்கள் முன்னதாக இணையத்தில் வெளியாகி இருந்தன. அவற்றை தொடர்ந்து தற்போது மீண்டும் இவை புனேக்கு அருகே லோனாவாலா என்ற வாகனங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிரப்பும் பகுதிக்கு அருகே சோதனை ஓட்டத்தின்போது கார்அண்ட்பைக் செய்திதளத்தின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளன.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

இந்த வருடத்திற்குள்ளாக அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படும் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வேரியண்ட்கள் இந்த சோதனை ஓட்டத்தில் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தன. மேலும், இவை டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

இருப்பினும் பரிமாண அளவுகளில் வழக்கமான டியாகோ மற்றும் டிகோர் கார்களுக்கும், அவற்றின் சிஎன்ஜி வெர்சன்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இருக்காது போல் தான் தெரிகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் டியாகோவின் மிட்-வேரியண்ட்டும், டிகோரின் விலை குறைவான வேரியண்ட்டும் உட்படுத்தப்பட்டிருக்கலாம்.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

ஏனென்றால் சோதனை டியாகோவில் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களும், டிகோரில் இரும்பு சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை கடந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தியது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

இவற்றில் சிறிய 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினிற்கு மாற்றாக ஒரே ஒரு 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டது. அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதே பெட்ரோல் என்ஜின் தான் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்களிலும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?

இந்த என்ஜின் இரு டாடா கார்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) உடன் வழங்கப்படுகின்றன. ஹேட்ச்பேக் காரான டாடா டியாகோவின் சிஎன்ஜி வேரியண்ட்டிற்கு மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி, ஹூண்டாய் சாண்ட்ரோ சிஎன்ஜி உள்ளிட்டவையும், காம்பெக்ட் செடான் காரான டாடா டிகோரின் சிஎன்ஜி வேரியண்ட்டிற்கு ஹூண்டாய் அவ்ரா சிஎன்ஜி காரும் போட்டியாக விளங்கும்.

Most Read Articles

English summary
Tata Tiago, Tigor CNG Variants Spotted Testing Again
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X