Just In
- 2 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 4 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 5 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 5 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
பிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம்ம... நாளை, குடியரசு தினத்தில் அறிமுகமாகிறது அரசியல்வாதிகளின் பிரபலமான டாடா கார்...
இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான கார் ஒன்று புத்துயிர் பெற்று நாளை அறிமுகமாக இருக்கின்றது. இக்கார் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

நாட்டின் 72 வது குடியரசு தினம் நாளை (ஜனவரி 26) கொண்டாடப்பட இருக்கின்றது. எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் நாடு நடப்பாண்டில் மிகவும் பேரிடர் (கொரோனா) காலத்தில் சிக்கியிருப்பதன் காரணத்தினால் பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. ஒரு பக்கம் கொரோனா அச்சுறுத்தல் நீடித்து வருகின்ற வகையில் மறுபக்கம் விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையிலேயே நாளை குடியரசு தினம் நாட்டின் செங்கோட்டையில் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த வேலையில் மற்றும் சிறப்பான சம்பவம் இந்தியாவில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமாங்க, நாளைய தினத்தில் டாடா நிறுவனம் அதன் மிக முக்கிய வரவேற்பாக எதிர்பார்க்கப்படும் சஃபாரி காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே மிகவும் பிடித்தமான கார் என்று கூறினால் மிகையாது. இதன் அதீத பாதுகாப்பு திறன் காரணமாக முந்தைய காலங்களில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் இக்காரையே பயன்படுத்தி வந்தனர். எனவேதான் இக்கார் அரசியல்வாதிகளின் பிரியமான காராக பார்க்கப்பட்டு வந்தது.

இக்காரையே கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக டாடா நிறுவனம் சந்தையை விட்டு வெளியேற்றியது. தற்போது நவீன ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிகளுடன் மீண்டும் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இக்காரை கிராவிடஸ் எனும் பெயரிலேயே முன்னதாக களமிறக்க டாடா திட்டமிட்டிருந்தது. இந்த பெயரிலேயே கடந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமும் செய்தது.

ஆனால், இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு சஃபாரி எனும் பெயரில் களமிறக்க இருப்பதாக டாடா மிக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையிலேயே இக்கார் நாளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக இருக்கின்றது. இம்முறை பல்வேறு புதிய கவர்ச்சிகரமான வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக இக்கார் அறிமுகமாகியபோதே இதுகுறித்த பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

அந்தவகையில், மூன்று அம்புகள் வடிவிலான க்ரில், முகப்பு மின் விளக்கைச் சுற்றிலும் குரோம் பூச்சு கொண்ட அணிகலன்கள் (detailing), ஸ்கிட் பிளேட், செயல்படக்கூடிய ரூஃப் ரெயில், சமதளமான பூட் லிட், புதிய வால் மின் விளக்கு, புதுப்பிக்கப்பட்ட பம்பர்கள் என பல்வேறு கவர்ச்சி கூறுகள் இக்காரில் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.

இதுமட்டுமின்றி, தற்போது விற்பனையில் இருக்கும் ஹாரியர் எஸ்யூவி காரின் அம்சங்கள் சிலவற்றையும் இக்கார் பெற இருப்பது தெரியவருகின்றது. எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் அம்சங்களில் இரு காரும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேசமயம், காரின் உட்பகுதி மட்டும் தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து டாடா கார்களைக் காட்டிலும் சற்று கூடுதல் இட வசதியுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுபோன்ற சொகுசு வசதியைக் கொண்டிருந்த காரணத்தினாலயே முன்னதாக விற்பனையில் இருந்த டாடா சஃபாரி இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான வாகனமாக திகழ்ந்தது. எனவேதான் தற்போதைய புதிய சஃபாரி காரிலும் இதுபோன்ற சிறப்புமிக்க வசதிகளை தவறாமல் வழங்க டாடா முயற்சிகளை எடுத்திருக்கின்றது.

இதுமட்டுமின்றி புதிய சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரானிக் பிரேக், இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் பார்கிங் சென்சார்கள் உள்ளிட்டவையும் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, பனோரமிக் சன்ரூஃப், 8.8 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இடைநிலையிலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள் உள்ளிட்டவையும் இக்காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும், பாதுகாப்பு வசதிகளாக இக்காரில் ஆறு ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பார்கிங் கேமிரா, ரியர் வீலில் டிஸ்க் பிரேக், முன் மற்றும் பின் பக்கங்களில் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இக்காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சங்கள் அதீத பாதுகாப்பை வழங்க உதவும்.