இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

டாடா நிறுவனம் இன்று ஒரே நாளில் புதிதாக 21 புதிய வர்த்தக வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த பதிவில் காணலாம், வாங்க.

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் வர்த்தக வாகன பிரிவில் புதிதாக 21 வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நாளில் அனைத்து வாகனங்களும் களமிறக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது.

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

மேலும், இந்திய வாகன உலகின் புதிய வரலாற்று சாதனையாக இது அமைந்துள்ளது. டாடா நிறுவனம் பன்முக தேர்வில் வர்த்தக பிரிவில் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. பயணிகள், சரக்கு, இலகு மற்றும் ஹெவி என பன்முக தேர்வுகளில் வணிக ரீதியாக பயன்படக் கூடிய வாகனங்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

அவ்வாறு அது விற்பனைக்கு வழங்கும் ஒவ்வொரு மாடலிலும், அதாவது, ஒவ்வொரு வர்த்தக வாகன பிரிவிலும் புதிய வேரியண்டுகள் மற்றும் புதுமுக மாடல்கள் என ஒட்டுமொத்தமாக 21 வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை கீழே காணலாம், வாங்க.

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

மீடியம் மற்றும் ஹெவி வர்த்தக வாகன பிரிவில் ஒட்டுமொத்தமாக புதிதாக 7 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை:

சிக்னா 5530.எஸ் (Signa 5530.S)

சிக்னா 4623.எஸ் 5.6 லிட்டர் கம்மின்ஸ் எஞ்ஜின் வசதி உடன் (Signa 4623.S with its 5.6L Cummins engine, 230hp and 850Nm of torque)

சிக்னா 4625.எஸ் இஎஸ்சி (Signa 4625.S ESC [Electronic stability Control])

சிக்னா 4221.டி (Signa 4221.T powered by 5L Turbotronn engine)

சிக்னா 4021.எஸ் (Signa 4021.S offers tractor-trailer application)

சிக்னா 3118.டி - இந்தியாவின் முதல் 10 வீலர் 31 டன் ட்ரக்காக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (Signa 3118.T is India's first 10-wheeler 31T Truck with 12.5T Lift axle)

பிரைமா 2830.கே ஆர்எம்சி (Prima 2830.K RMC comes with Rear Engine Power Take-Off (REPTO))

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

இன்டர்மீடியேட் மற்றும் இலகு ரக வர்த்தக வாகன பிரிவில் ஒட்டுமொத்தமாக ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை:

அல்ட்ரா டி.18 எஸ்எல் (Ultra T.18 SL sit in the 18-tonne segment, with payload of 11.5 tonne)

407ஜி - இது ஓர் சிஎன்ஜி வசதிக் கொண்ட டெலிவரி வாகனம் ஆகும். (407G is a CNG pick-up truck for last-mile delivery)

709ஜி சிஎன்ஜி - பெரிய உடல் அமைப்பு கொண்ட லோடு வாகனம் இது. (709G CNG offers large loading area on a 4-tyre CNG truck)

எல்பிடி 510 (LPT 510 gets a unique 10ft load body and short wheelbase)

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

சிறிய வர்த்தக வாகனம் மற்றும் பிக்-அப் வேன்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை:

விங்கர் கார்கோ (Winger Cargo for e-commerce distribution)

ஏஸ் பெட்ரோல் சிஎக்ஸ் (Ace Petrol CX cab chassis is a low-priced 4-wheeler for multiple commercial applications)

ஏஸ் கோல்டு டீசல்-ப்ளஸ் (Ace Gold Diesel+ provides higher fuel efficiency)

இன்ட்ரா வி30 (Intra V30 High deck falls in the Smart PU range)

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

பயணிகள் வர்த்தக வாகன பிரிவில் ஒட்டுமொத்தமாக ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை:

விங்கர் 15எஸ் - முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் அதிக கம்ஃபோர்டான வசதிகளுடன் உருவாகியுள்ளது. (Winger 15S travel van some segment-first comfort features)

ஸ்டார்பஸ் 4/12 (Starbus 4/12 LE electric bus for urban mass mobility)

ஸ்டார்பஸ் 2200 சீரிஸ் - பள்ளிக் கூடங்கள் மற்றும் பணியாளர்களை அழைத்து செல்ல உதவும். (Starbus 2200 series for school and staff transportation needs)

சிட்டி ரைட் பிரைம் எல்பிஓ 1315 (Cityride Prime LPO 1315 Bus for spacious passenger salon and wider gangway)

மக்னா கோச் (Magna coach is a 13.5m bus for inter-city travel)

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

மேலே பார்த்த 21 வகையிலான வாகனங்களையே டாடா நிறுவனம் தற்போது புதிதாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இத்தகைய அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஒரே நாளில் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது தான் ஜாம்பவான் நிறுவனம் என்பதை டாடா மோட்டார்ஸ் மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இதனால்தான் இது ஜாம்பவான்... ஒரே நேரத்தில் 21 புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்த டாடா! வேற லெவல் சம்பவம்!

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தனிநபர் பயன்பாட்டு வசதிக் கொண்ட புதுமுக வாகனங்களைக் களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் டாடா நிறுவனம் தனித்துவமான வர்த்தக வாகன பிரிவை அலங்கரிக்கும் வகையில் ஒரே நாளில் 21 புதுமுக வாகனங்களை அறிமுகம் செய்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Tata unveils 21 new commercial vehicles across all segments in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X