நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

யுடியூப்பர் மதன் கௌரியின் வேண்டுக்கோளிற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்திய வருகையில் இருக்கும் தடையை போட்டுடைப்பது போல் பதிலளித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

வாகனங்கள் இறக்குமதியில் கணிசமான வரி குறைப்பு கிடைத்தால், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தில் டெஸ்லா உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்திடம் தங்களது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்படும் வரியில் மிக பெரிய வரி குறைப்பிற்கு டெஸ்லா நிறுவனம் சார்பில் வேண்டுக்கோள் விடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

விற்பனைக்கு வந்தாலும் டெஸ்லா நிறுவனம் குறைந்த அளவிலான கார்களை தான் இறக்குமதி செய்யும். இருப்பினும் அதற்கும் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள அதிகப்படியான இறக்குமதி வரிகள் தடையாக அமைந்துள்ளன.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

தங்களது இந்திய வருகையில் இருக்கும் இந்த தடையை தான் நிறுவனர் எலான் மஸ்க் மிகவும் ஆதங்கத்துடன், பிரபல யுடியூப்பர் மதன் கௌரியின் வேண்டுக்கோளிற்கு பதிலாக கூறியுள்ளார். இதுக்குறித்த எலானின் டுவிட்டர் பதிவில், "நாங்கள் அவ்வாறு செய்யவே விரும்புகிறோம்.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

ஆனால் இறக்குமதி வரிகள் உலகில் எந்தவொரு பெரிய நாட்டையும் விட மிக அதிகமாக இங்கு உள்ளது. மேலும், தூய்மையான எரிசக்தி வாகனங்கள் மற்றும் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்கள் ஒரே தராசில் எடைப்போடப்படுகின்றன.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை" என கூறப்பட்டுள்ளது. மேலும், "ஆனால் மின்சார வாகனங்களுக்கு குறைந்தப்பட்சம் தற்காலிக நிவாரண உதவி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என மற்றொரு ட்விட்டில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

பெரும்பாலும் இந்தியாவில் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முழுவதுமாக வெளிநாட்டில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் அவற்றின் கார்களுக்கு அதிகப்படியான வரி விதிப்பது வழக்கமே.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

இருப்பினும் இந்தியாவை தாயகமாக கொண்டு செயல்படும் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால், அவற்றின் விற்பனையில் பெரிய அளவில் தடையில்லாமல் இத்தனை வருடங்களாக இருந்து வருகிறது.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

நமக்கு கிடைத்துள்ள தகவலில், நடப்பு 2021ஆம் வருடத்தில் இந்தியாவில் விற்பனையை துவங்க திட்டமிட்டுள்ள டெஸ்லா நிறுவனம், வாகன இறக்குமதியில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூட்டாட்சி வரியை 40% குறைக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்திற்கும், இந்தியாவின் முதன்மையான சிந்தனை தொட்டியாக விளங்கும் நிடி அயோக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வர தான் நினைக்கிறோம், ஆனா...!! இந்தியாவை பற்றி என்ன எலான் மஸ்க் இப்படி சொல்லிட்டாரு!

தற்சமயம் ரூ.30 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் கார்கள் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுவதற்கு 60% வரியும், ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு 100% வரியும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla asks to reduce import duties on imported electric cars.
Story first published: Sunday, July 25, 2021, 16:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X