இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்!

டெஸ்லா நிறுவனத்தின் இந்திய கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைய உள்ளது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெஸ்லா கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைகிறது தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. இதற்காக, ஆரம்ப கட்ட பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பெங்களூரில் தலைமையகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ள அந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் கார் அசெம்பிள் செய்வதற்கான ஆலையையும் திறக்க திட்டமிட்டுள்ளது.

டெஸ்லா கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைகிறது தெரியுமா?

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் கார் ஆலையை தங்களது பக்கம் இழுப்பதற்கு, தமிழகம், கர்நாடாக, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.

டெஸ்லா கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைகிறது தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்தின் கார் ஆலையை கவர்ந்து இழுப்பதற்காக பல்வேறு சலுகைகளை அள்ளி வீசி வருகின்றன. ஆனால், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார் ஆலையை அமைப்பது குறித்த திட்டத்தை மிக நிதானமாக யோசித்து செய்ய முடிவு செய்துள்ளது.

டெஸ்லா கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைகிறது தெரியுமா?

இந்த நிலையில், குஜராத்தில் டெஸ்லா கார் ஆலை அமைவதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் இருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. டெஸ்லா நிறுவனத்தை எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என்பதில் குஜராத் அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

டெஸ்லா கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைகிறது தெரியுமா?

இதற்காக, பல்வேறு சிறப்புச் சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை வழங்குவதாக குஜராத் அரசு டெஸ்லாவிடம் உறுதி அளித்துள்ளது. மேலும், குஜராத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியிலும் சிறந்த கட்டமைப்பை கொண்டிருப்பதும் குஜராத்தின் சாதகமான விஷயமாக டெஸ்லாவிடம் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

டெஸ்லா கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைகிறது தெரியுமா?

இந்தியாவில் முதலாவதாக டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவியும், இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய கார்கள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா கார் ஆலை எந்த மாநிலத்தில் அமைகிறது தெரியுமா?

டெஸ்லா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் ஆரம்ப ரக சொகுசு கார் மாடல்களுக்கு கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாசு உமிழ்வு இல்லா சூழலை உருவாக்குவதிலும் டெஸ்லா கார்கள் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு இருப்பதால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
According to report, Tesla is likely to set up car plant in Gujarat.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X