கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

கார் ஒன்று கப்பலை தோற்கடிக்கும் வகையில் வெள்ள நீரில் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அது என்ன கார்? எங்கு நடைபெற்றது? என்பது பற்றிய முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அண்மையில் வெளுத்து வாங்கிய மழையால் அந்த நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிப்புகுள்ளாகின. இதேபோன்று கடும் மழையால் சீனா அண்மையில் பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்போதும் கடும் மழை பொழிந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

இந்த மாதிரியான சூழ்நிலையில் சீனாவின் குறிப்பிட்ட ஓர் நகரத்தில் மழை வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் சாலையில் ஓர் கார் கப்பலையே மிஞ்சும் வகையில் சென்றிருப்பது பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிற கார்கள் அந்த சாலையைக் கடக்க முடியாமல் திக்கி திணறிக் கொண்டிருந்தநிலையில் அந்த ஒற்றை கார் மட்டும் நீர் மூழ்கி கப்பலை போல் வெள்ள நீரை கிழித்துச் சென்றது.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

இதன் காரணத்தினாலேயே பலர் மிகுந்த ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றனர். சீனாவில் அரங்கேறிய இந்த நிகழ்வுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெள்ள நீரை கிழித்துச் சென்றது டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 மின்சார காராகும். இந்த காருக்கு உலக நாடுகள் பலவற்றில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

இந்த வரவேற்பை இன்னும் அதிகரிக்கச் செய்யும் வகையில் திறம்பட வெள்ள நீரில் அது செயல்பட்டிருக்கின்றது. டெஸ்லா மாடல் 3 காரின் விண்ட் ஷீல்டு வரை வெள்ள நீர் நிரம்பியிருக்க அப்போதும் அது அசால்டாக அந்த சாலையைக் கடந்து சென்றது. ஒட்டுமொத்தமாக மூன்று வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

அனைத்துமே டெஸ்லா மாடல் 3 மின்சார காருடையதாகும். மேலும், மூன்றுமே விண்ட் ஷீல்டு வரை வெள்ள நீர் சூழ்ந்திருக்க அந்த சாலையில் அசால்டாக செல்லும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதுபோன்ற தண்ணீர் நிறைந்த சாலைகளைச் சமாளிக்கும் திறனைக் (பயணிக்கும் திறனை)-க் கொண்டிருக்கலாம். ஆனால், அது ஆபத்தானது.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் சாலைகளில் எங்கு பள்ளம் இருக்கும், மேடு இருக்கும் என்பதே தெரியாது. அந்த மாதிரியான சாலையில் தண்ணீர் நிரம்பியிருக்குமானால் அது மிகுந்த ஆபத்தை விளைவிக்கும். ஆகையால், இதுபோன்ற பயணங்களைத் தவிர்ப்பதே சிறந்தது.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. மிக அது விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இறக்குமதி வரி அதிகமாக இருப்பதாகவும், அதனைக் குறைக்க வேண்டி டெஸ்லா நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கப்பலையே தோற்கடிச்சிரும் போல! எல்லா காரும் ஸ்ட்ரக்காகி நிற்க ஒன்னு மட்டும் நிற்கவே இல்ல! என்ன காருங்க அது?

ஆகையால், இன்னும் ஒரு சில மாதங்களிலேயே இந்திய சாலையை களம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டெஸ்லா நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் மாடல் 3 மின்சார காரையே இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இது ஓர் முழுமையான சார்ஜில் 568 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த சிறப்பு திறன் கொண்ட காரையே இந்தியாவிற்கான தனது முதல் மின்சார காராக விற்பனைக்கு வழங்க டெஸ்லா திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tesla Model 3 EV Crossess Flooded Road Like Yachet. Read In Tamil.
Story first published: Friday, July 30, 2021, 16:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X