Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக மின்சார கார் ஒன்று பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அதன் மாடல் எஸ் எனும் மின்சார காருக்கு அப்டேட்டினை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக தனது தயாரிப்புகளுக்கு சிறப்பு சேவையாக அப்டேட் வழங்கும் செயலில் டெஸ்லா ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே மாடல் எஸ் மின்சார காருக்கும் டெஸ்லா அப்டேட்டினை வழங்க தொடங்கியுள்ளது. பிளேன் காணப்படுவதைப் போன்று ஸ்டியரிங் வீல், டிவி போன்ற திரை என பல்வேறு சிறப்பு வசதிகளை இந்த அப்டேட்டின் வாயிலாக டெஸ்லா வழங்கி வருகின்றது.

மாடல் 3 மின்சார காரைப் போலவே டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களில் ஒன்றாக மாடல் எஸ் எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. எனவேதான் அப்டேட்டுகளை மாடல் எஸ் எலெக்ட்ரிக் காரில் டெஸ்லா அறிமுகம் செய்திருக்கின்றது.

தொடர்ந்து, மறு வடிவமைக்கப்பட்ட (புதிய ஸ்டைல்) டேஷ்போர்டு, மூன்று-ஸோன் கொண்ட டெம்ப்ரேட்சர் கன்ட்ரோல்கள், வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை மற்றும் ஹெப்பா காற்று வடிகட்டி ஆகிய சிறப்பம்சங்களையும் இந்த புதிய அப்டேட்டின் வாயிலாக டெஸ்லா அறிமுகம் செய்திருக்கின்றது.

தற்போது கிடைத்து வரும் விற்பனையைக் கூடுதலாக்கும் (இரட்டிப்பாக்கும்) நோக்கில் இந்த அப்டேட்டினை அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. இதில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அம்சமாக ஸ்டியரிங் அமைந்திருக்கின்றது. இது பல்வேறு கட்டுப்பாடு பொத்தான்களைக் கொண்டிருப்பதோடு இல்லாமல் இதுவரை எந்த காரிலும் இல்லாத ஓர் ஸ்டைலில் காட்சியளிக்கின்றது.

மிகவும் தட்டையாான ஏரோ ப்ளேன்களில் மட்டுமே காணப்படக் கூடிய ஸ்டைலில் இந்த ஸ்டியரிங் வீல் இருக்கின்றது. எனவேதான் தற்போதைய அப்டேட்டுகளிலேயே பலரைக் கவரக் கூடிய அம்சமாக இது இருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தில் டிவி போன்ற திரை இருக்கின்றது. இது 2200x1300 ரெசொல்யூசன் வசதிக் கொண்ட 17 இன்ச் திரையாகும்.

இதன் மூலம் எண்ணற்ற தகவல்களையும், பொழுதுபோக்கு விஷயங்களையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, 960 வாட் திறன் கொண்ட 22 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றது. இதில், இரைச்சல் போன்ற என்ற எந்தவித தேவையற்ற சத்தத்தையும் வெளிப்படுத்தாது.

மேலும், முன்பைக் காட்டிலும் அதிக சொகுசான மற்றும் மிருதுவமான இரைக்ககளையையும் அப்டேட்டின் வாயிலாக டெஸ்லா மாடல் எஸ் காரில் கொண்டு வந்திருக்கின்றது. இதுபோன்ற எக்கசக்க அம்சங்களையும் மாடல் எஸ் மின்சார காரில் டெஸ்லா கொண்டு வந்திருப்பதால் அதன் ரசிகர்கள் பெருத்த உற்சாகத்தில் மூழ்கியிருக்கின்றனர். இந்த கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ3 மின்சார சொகுசு காருக்கு போட்டியாக உலக சந்தையில் விற்பனைக்கு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.